காதல் கிசுகிசு.. பிரபல நடிகர் பற்றி மோசமான வீடியோ.. யூடியூபரை அதிரடியாக கைது செய்த போலீஸ்!

ஹைதராபாத்: பிரபல நடிகர் பற்றி படுமோசமாக பேசிய யூடியூபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா கீதா கோவிந்தம் படத்தின் மூலம் டீன் ஏஜ் பெண்களின் கனவு கண்ணனாக மாறினார்.

இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர கொண்டாவின் கெமிஸ்டிரி சும்மா பக்காவாக இருந்தது.

ராஷ்மிகா-விஜய் தேவர கொண்டா: அந்த படத்தைத் தொடர்ந்து இருவரும் சாம்ராட் படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படமும் ஹிட்டடித்து பாக் ஆபிஸில் வசூலை அள்ளியது. இருவரும் இரண்டு படத்தில் இணைந்து நடித்ததால், விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக பல தரப்பிலிருந்து கிசு கிசுக்கள் எழுந்தது. மேலும், விஜய் மற்றும் ராஷ்மிகா டேட்டிங்கில் தான் இருக்கிறார்கள் என உறுதிப்படுத்தும் வகையில் ரசிகர்கள் ஆதாரத்தை வெளியிட்டாலும் அதற்கும் எந்த பதிலும் தெரிவிக்காமல் இருவரும் அமைதியாக இருக்கிறார்கள்.

Youtuber Arrested for Vulgar Content on Vijay Deverakonda

சமந்தாவுடன் காதல்: அண்மையில் விஜய் தேவரகொண்ட சமந்தாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்தார். பான் இந்திய திரைப்படமாக வெளியான இத்திரைப்படத்தில் இருவரின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிசில் நன்றாக கல்லாக் கட்டியது. இந்த படத்தில் விஜய்தேவரகொண்ட சமந்தா இணைந்து நடித்தால், இருவரும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்தி பரவியது.

மோசமான விமர்சனம்: இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவை பற்றி யூடியூப் சேனலில் பேசிய நபரை கைது செய்துள்ளனர். அனந்தபூரைச் சேர்ந்த வெங்கட கிரண் என்ற நபர் இரண்டு தினங்களுக்கு முன் தனது யூடியூப் தளத்தில், விஜய் தேவரகொண்ட பற்றியும் அவருடன் இணைந்து நடித்த நடிகை குறித்தும் படுமோசமாக பேசி இருந்தார். இதுகுறித்து ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையிடம் விஜய் தேவரகொண்ட தரப்பு புகார் அளித்தது.

அதிரடி கைது: புகார் அளித்து சில மணி நேரங்களிலேயே போலீஸ் அதிரடியாக அந்த நபரை கைது செய்து, அந்த யூடியூப் சேனலில் அந்த வீடியோவை நீக்கி உள்ளனர். மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் கவுன்சிலிங் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர் போலீசார். புகார் அளித்த சில மணி நேரத்திலே ஹைதராபாத் போலீசார் எடுத்த துரித நடவடிக்கையை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் யூடியூப் சேனலில் வாய்க்கு வந்த படி பேசுபவர்களுக்கு இதுஒரு பாடமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்ளை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X