twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கபெ ரணசிங்கம்: விஜய் சேதுபதிக்கு வேலையே இல்லை.. லாஜிக் மிஸ்ஸிங்.. யூடியூபர் அஷ்வின் அதிரடி ரிவ்யூ!

    |

    சென்னை: கபெ ரணசிங்கம் படம் குறித்து யூ டியூபரான அஷ்வின் தனது அதிரடி விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

    Recommended Video

    க.பெ/ரணசிங்கம் - திரைப்பட விமர்சனம்

    கபெ ரணசிங்கம் திரைப்படம் ஜீ ப்ளெக்ஸ் ஒடிடி தளத்தில் நேற்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்பு இடையே முதல் முறையாக முன்னணி நடிகரின் படமாக கபெ ரணசிங்கம் திரைபடம் ஓடிடி தளத்தில் வெளியானது.

    விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநரான பெ.விருமாண்டி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    சர்ச்சைகளுக்கு நடுவில்

    சர்ச்சைகளுக்கு நடுவில்

    இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் 'பூ' ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, முனிஸ் காந்த், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதிக கட்டணம், தொழில் நுட்ப கோளாறுகள், கெடுபிடியான கட்டுப்பாடுகள் என சர்ச்சைகளுக்கு நடுவே வெளியானது இப்படம்.

    இளம் விமர்சகர்

    இளம் விமர்சகர்

    இந்தப் படம் எதிர்பார்த்தது போன்று இருந்ததா இல்லையா என்பது குறித்தும் படம் எப்படி என்பது குறித்தும் தங்களின் கண்ணோட்டங்களையும் விமர்சனங்களையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறன்றனர். அந்த வகையில் இளம் யூட்யூப் விமர்சகரான அஷ்வினும் தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

    முக்கியத்துவம் இல்லை

    முக்கியத்துவம் இல்லை

    அதன்படி, சிறந்த நடிகரான விஜய் சேதுபதியை இயக்குநர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என கூறியுள்ளார். சில காட்சிளில் மட்டுமே விஜய் சேதுபதி வந்து செல்கிறார் என்றும், அவருக்கான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

    ஃபீமேல் சப்ஜெக்ட் படம்

    ஃபீமேல் சப்ஜெக்ட் படம்

    மேலும் படம் முழுக்க ஐஸ்வர்யா ராஜேஷ்தான் வியாப்பித்திருக்கிறார். படத்தை அவர்தான் சுமந்து செல்கிறார். கபெ ரணசிங்கம் ஒரு ஃபீமேல் சப்ஜெக்ட் படம். ஃபீமேல் சப்ஜெக்ட் படம், தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று தெரிந்தும் பெருந்தன்மையாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

    சொற்ப காட்சிகள்

    சொற்ப காட்சிகள்

    சொற்ப காட்சிகளில் வந்தாலும் படத்திற்கு ஃபுல் சப்போர்ட் உள்ளார் விஜய் சேதுபதி. விஜய் பேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் பேசிக்கொள்ளும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது. இதேபோல் முனிஸ்காந்தும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. படம் மூன்று மணி நேரத்திற்கு செல்கிறது. வெளிநாட்டில் இறந்த கணவனின் உடலை பெற போராடும் பெண்ணாக சிறப்பாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    வைரமுத்து வரிகள்

    வைரமுத்து வரிகள்

    ஜிப்ரான் இசையில் வைரமுத்துவின் வரிகள் படத்திற்கு பெரும் பலமாக உள்ளது. வைரமுத்துவின் வரிகள் கதைக்கு ஒன்றிபோயுள்ளது. சண்டைக்காட்சிகள் பெரிதாக இல்லை. அதேபோல் கபெ ரணசிங்கம் படத்தில் காமெடிக்கும் பஞ்சம். தென்மேற்கு பருவ காற்று, தர்மதுரை போன்றே உள்ளது கபெ ரணசிங்கம்.

    லாஜிக் மிஸ்ஸிங்

    படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்களின் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மொத்தத்தில் வெற்றி படம் என்றாலும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம், பல இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங் என கபெ ரணசிங்கத்தில் குறைகளும் உள்ளதாக கூறியிருக்கிறார் இளம் விமர்சகர் அஷ்வின்.

    English summary
    Youtuber Ashwin review about Ka Pae Ranasingam movie. He says there is no importence for Vijay Sethupathi in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X