நெடுமாறன் ராஜாங்கம் யார் தெரியுமா.. சூரரைப்போற்று ட்ரெயிலரை அலசும் யூடியூபர் அஷ்வின்!
சென்னை: சூரரைப் போற்று படத்தின் ட்ரெயிலரை இன்ச் பை இன்ச்சாக அலசியுள்ளார் யூ டியூபர் அஷ்வின்.
சூரரைப் போற்று படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது. நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நேற்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் ட்ரெயிலரை ஷேர் செய்த நடிகர் சூர்யா வரும் நவம்பர் 12ஆம் தேதி படம் அமேஸான் பிரைமில் ரிலீஸ் ஆகும் என்பதையும் அறிவித்தார்.

அலசி ஆராய்ந்து
இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சூரரைப்போற்று ட்ரெயிலர் குறித்து, யூடியூபர் மற்றும் இளம் விமர்சகரான அஷ்வின் ஒவ்வொரு காட்சியையும் அலசி ஆராய்ந்துள்ளார்.

சூர்யாவின் கெட்டப்புகள்
ட்ரெயிலரில் இடம் பெற்றுள்ள ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போகனும் மற்றும் வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா என்பது உள்ளிட்ட டயலாக்குகள் குறித்தும் விவரித்துள்ளார். மேலும் அபர்ணாவிடம், சூர்யா பேசும் காதல் வசனங்களையும் குறிப்பிட்டுள்ள அஷ்வின், சூர்யாவின் கெட்டப்புகள் குறித்தும் பேசியிருக்கிறார்.

நிரூபணம்
மேலும் ஜிவி பிரகாஷின் இசைக் குறித்து பேசியுள்ள அஷ்வின், சுதா கொங்கரா மணி சாரின் அசிஸ்டன்ட் என்பதை நிரூபித்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். சூரரைப் போற்று படத்தின் பாடல் மற்றும் ட்ரெயிலரில் அது நிரூபணமாகியிருப்பதாக கூறியிருக்கிறார் அஷ்வின்.
முன்னணி ஹீரோக்கள்
சூரரைப்போற்று படம் நிச்சயம் சூர்யாவுக்கு ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்று கூறியுள்ள அஷ்வின், இந்தப் படத்திற்கு பிறகு சுதா கொங்கராவை பல முன்னணி ஹீரோக்கள் அணுகுவார்கள் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











