பார்க்கிங் பிரச்சனை.. கேப்டனின் முதுகில் குத்திய வடிவேலு..பயில்வான் ரங்கநாதன் வேதனை!

சென்னை: விஜயகாந்த் செய்த உதவிக்கு வடிவேலு அவரை நெஞ்சில் சுமக்க வேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் பல தருணங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க் கிழமையன்று மீண்டும் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

Youtuber Bayilvan Ranganathan About Vijayakanth and Vadivelu fight

அவரது உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டு ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. கட்டுக்கடங்காத கூட்டத்தால், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் மெதுமெதுவாக ஊர்ந்து வருகிறது. சாலையில் இரண்டு புறமும் அலைகடல் போல திரண்டு இருந்த மக்கள் கதறி அழுதபடி கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திரைப்பிரபலங்கள் அஞ்சலி: விஜய்காந்தின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் திருப்பி போட்டு, அனைவரையும் கண்ணீர் கடலில் மூழ்கடித்து வருகிறது. கட்சி பாகுபாடு இன்றி அனைத்து தலைவர்களும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். விஜய்காந்த் வளர்த்துவிட்ட விஜய் நேற்று இரவே, தேம்பி தேம்பி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், அர்ஜுன், விஜய் அண்டனி, மோகன். தியாகு, பாக்யராஜ், பாண்யராஜன் என பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இரங்கல் கூடதெரிவிக்காத வடிவேலு: ஆனால், விஜயகாந்தால் வளர்ந்த வடிவேலு குறைந்தபட்சம் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இதனால், கடும் அதிருப்தியில் இருக்கும் விஜயகாந்த் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டிதீர்த்து வருகின்றனர். சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்த வடிவேலுக்கு சின்னக்கவுண்டர் படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்தது கேப்டன் தான். அவன் நம்ம ஊருக்காரப்பா நல்ல வரட்டும் என்று உதவி செய்தவர் விஜயகாந்த். இப்படி வளர்த்துவிட்ட வடிவேலு இன்று ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் இருப்பதுதான் வேதனையிலும் வேதனை.

முதுகில் குத்திவிட்டார்: இந்நிலையில், விஜயகாந்த் மற்றும் வடிவேல் சண்டை குறித்து பயில்பான் ரங்கநாதன் பேசி உள்ளார். இருவரின் வீடுமோ சாலிகிராமத்தில் தான் உள்ளது. விஜயகாந்த் வீட்டில் ஒரு துக்கம் நடந்த போது ஏற்பட்ட பார்க்கிங் பிரச்சனையில் விஜயகாந்தை மிகவும் தரக்குறைவாக பேசிவிட்டார் வடிவேலு. விஜயகாந்த் செய்த உதவிக்கு வடிவேலு அவரை காலம் முழுக்க நெஞ்சில் சுமக்க வேண்டும் ஆனால், அப்படி அவர் செய்யாமல் முதுகில் குத்திவிட்டார். என்னை வளர்த்துவிட்டது விஜயகாந்த் மற்றும் கமல் தான் என்று வடிவேலுவே பல பேட்டியில் சொல்லி இருக்கிறார். ஆனால், வடிவேலுவின் கோவம் அவரது கண்னை மறைத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் என்று பயில்வான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X