உளறாதே.. இனியாவது திருந்து.. பப்லுவை விளாசிய பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: பப்லு நான் உங்களை பற்றி தவறாக பேசவில்லை என்று பயில்வான் ரங்கநான் பேட்டியில் ஒன்றில் கடுமையாக திட்டி தீர்த்துள்ளார்.
பிரபல நடிகரான பப்லு, 23 வயதே ஆன ஷீத்தலுடன் உறவில் இருந்தது சோஷியல் மீடியாவில் பேசு பொருளானதை அடுத்து, அனைத்து விமர்சனத்திற்கும் பப்லு அசராமல் பதில் அளித்தார்.

இதையடுத்து, இருவரும் சேர்ந்து ஜோடியாக வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது.
அந்தரங்க ஆசைக்கு மட்டும்: இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், ஷீத்தல் பல நாட்களாக திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் பப்லு ஷீத்தலை அந்தரங்க ஆசைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டார். அவருக்கு மீண்டும் திருமண வாழ்க்கைக்கு செல்வதற்கு விருப்பம் இல்லை என்று பேசி இருந்தார்.
அசிங்கமானவர்: பயில்வானின் பேச்சால் கடுப்பான பப்லு, அவர், காசுக்காக எப்படி வேண்டுமானாலும் பேசுவார். உன்னுடைய அம்மாவையோ, தங்கையோ, பெண்ணையோ இப்படி அசிங்கமாக பேசுனா, உனக்கு எவ்வளவு வலிக்கும். அசிங்கமானவர்களால் அசிங்கமாத்தான் பேச முடியும் என்று பயில்வானை கடுமையாக தாக்கி பேசி இருந்தார்.
நான் பொய் சொல்லவில்லை: இதற்கு பதிலடி கொடுத்துள்ள பயில்வான் ரங்கநாதன், பப்லு குறித்து நான் தவறாக எதையும் பேசவில்லை. அவர் மட்டுமில்ல மற்றவர்கள் குறித்தும் நான் தவறாக எதையும் தவறாகவோ, ஆபாசமாகவோ பேசியதில்லை. 57 வயது பப்லு 23 வயது பெண்ணுடன் உறவில் இருந்தது தவறு என்று சொன்னேன். அதுமட்டுமில்லாமல் திருமணம் செய்யாமல் உறவில் இருந்தது தப்பு என்றுதான் சொன்னேன்.
பாடி டிமாண்டிங்: ஏற்கனவே பப்லு முதல் மனைவியை விவாகரத்து செய்தார். அப்படி இருக்கும் போது இரண்டாவதாக ஷீத்தலை திருமணம் செய்வதில் என்ன தயக்கம் என்று தான் கேட்டேன். உங்களை பற்றி தான் தப்பா எதுவும் பேசல, உங்களுக்கு பாடி டிமாண்டிங் இருக்கு, நீங்க தான் பேட்டியில் எனக்கு பொம்பள சோக்கு கேக்குதுனு சொன்னீங்க. அதுமட்டுமில்ல, ஷீத்தல் என்னை மிகவும் நேசிக்கிறார் என்று, அவரை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு வீடியோ போட்டது நீங்கதான்.
உளறாதீங்க: ஜனவரி மாதம் கல்யாணம் என்று சொன்னீங்க, ஆனால், அதற்குள் ஷீத்தலுடனான உறவு முறிந்துவிட்டது. இதெல்லாம் நீங்க மீடியா முன் உளறிவிட்டு நான் ஏதோ தப்பா சொன்னது போல சொல்றீங்களே, நான் எதை தவறாக சொன்னேன் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











