யாரு வெண்ண... நீ மனுஷனா.. அமீரை வெளுத்து வாங்கிய பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் உயிர் தமிழுக்கு. இந்தப்படத்தின் மூலம் ஆதம்பாவா இயக்குநராக மாறி உள்ளார். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய அமீர், பத்திரிக்கையாளர்களை வெண்ணை என்று திட்டியதற்கு பயில்வான் ரங்கநாதன் அமீரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமீர் கதாநாயகனாக நடித்துள்ள உயிர் தமிழுக்கு படத்தில், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். மேலும், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படம் மே 10ம் தேதி உலககெங்கும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில், இயக்குநர் அமீர் குறித்து பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், இயக்குநர் அமீர் உயிர் தமிழுக்கு என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அமீர் பத்திரிக்கையாளர்களை போடா வெண்ணை என்று திட்டினார் நல்லவேளையாக அந்த சந்திப்பில் நான் இல்லை. இருந்து இருந்தால் நான் குரல் கொடுத்து இருப்பேன். யாருப்பா வெண்ணை... வெண்னை ஆகாத பொருளா... பிரியாணியில் வெண்ணை இருக்காதே என்று எல்லாம் கேட்டு அவரை கேள்வி கேட்டு இருப்பேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி இருப்பார் அமீர்.
சமூக போராளியா: உயிர் தமிழுக்கு என்று எடுக்கப்பட்ட படத்தில் தமிழ் செல்வி என்கிற கதாநாயகியைத்தான் படத்தில் சொல்லி இருக்கிறார். அதற்கு உயிர் தமிழ் செல்விக்கு என்று பெயர் வைக்கவேண்டியது தானே, இல்லை உயிர் காதலிக்கு என்று சொல்ல வேண்டியது தானே. எதற்கு உயிர் தமிழுக்கு என்று பெயர் வைத்தார்கள். சரி இதுக்கூட பரவாயில்லை. இந்த படத்தில் அமீருக்கு சமூக போராளி என்று ஒரு பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டத்தை கொடுத்தது யார்... உண்மையில் அவர் எந்த சமூகத்திற்காக போராடினார்.
அமீரின் நடவடிக்கை சரியில்லை: அவர் கொடுத்த அனைத்து பேட்டியிலும் சிவக்குமார் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை, நான் அறிமுகப்படுத்திய சூர்யா எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என வசைப்பாடினார். தமிழ் சினிமாவிலேயே மிகவும் கண்ணியமானவர் சிவக்குமார் தான் அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால், அமீரின் நடவடிக்கை சரியில்லை என்று தானே அர்த்தம். பருத்திவீரன் படத்தில் எவ்வளவு பணத்தை செலவு செய்தீர்கள், இதனால் தானே ஞானவேல் ராஜா, கட்டுப்படி ஆகாது என்று கூடினார்.
திமிர், அகங்காரம்: இன்று உங்களை வைத்து படத்தை எடுத்து இருக்கும் ஆதம்பாவா, மதுரையில் இருந்து வந்த உங்களிடம் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டார். அவரை காலை 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை உட்கார வைத்துவிட்டு, பதில் எதுவும் சொல்லாமல் அனுப்பிவைத்துள்ளீர்கள். உங்களுக்கு நான்கு வெற்றிப்படத்தை இயக்கிவிட்டோம் என்ற அகங்காரத்திலும் திமிரின் உச்சியிலும் இருந்தீர்கள் என்று பயில்வான் ரங்கநாதன் அமீரை பல கடுமையான வார்த்தையால் திட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











