தினமும் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்.. விளம்பரத்திற்காக இப்படியா? நடிகையை விளாசிய பயில்வான்!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகை அங்கிதா லோகாண்டா, தென்னிந்திய தயாரிப்பாளர்கள் படுக்கையை பகிர்ந்தால் தான் படவாய்ப்பு என கூறியதாகவும், ஒரு தயாரிப்பாளர் தினமும் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்ததாகவும் பேட்டியில் கூறியிருந்தார். இந்த பேட்டியைப் பார்த்த பயில்வான் ரங்கநாதன், தைரியம் இருந்த தயாரிப்பாளர் பெயர் சொல்ல வேண்டியதுதானே, இது கூடவா விளம்பரம் என்று நடிகையை விளாசி உள்ளார்.

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து, சிறந்த நடிகர் என பெயர் எடுத்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்த இவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் காதலிதான் அங்கிதா லோகாண்டா. இவர் 1984 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் டிசம்பர் 19 ஆம் தேதி பிறந்தார். இவருக்கும் சுஷாந்த் சிங்கிற்கும் பவித்ர ரிஷ்டா என்ற தொடரில் நடித்தபோது காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங்டூ கெதர் ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். இருவரும் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொள்ள போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, இருவருக்குள் வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

Bayilvan Ranganathan Bollywood ankita lokhande

அங்கிதா லோகாண்டா: அதன்பின் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட போது, அவரை நினைத்து வருத்ததுடன் அங்கிதா பதிவுகளையும் வெளியிட்டிருந்தார். இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் விக்கி ஜெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது சீசனில் பங்கேற்ற அங்கிதா லோகாண்டே 3வது இடத்தைப் பிடித்தார்.

Bayilvan Ranganathan Bollywood ankita lokhande

தயாரிப்பாளர் தொல்லை கொடுத்தார்: அங்கிதா லோகாண்டா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மனம் திறந்து பேசி உள்ளார். அதில், சில ஆண்டுகளுக்கு முன், மும்பையில் வாய்ப்பு தேடி அலைந்தேன், ஆடிஷனுக்கு சென்ற போது பல தயாரிப்பாளர்கள் என்னை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள் அதற்கு விருப்பம் இல்லாதால், முடியாது என்று மறுத்துவிட்டேன். அதன் பின் தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக கமிட் ஆனேன் அப்போது இந்த தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள். அப்போது எனக்கு 19 வயது. அவர் அப்படி கேட்டதும், நான் மிகவும் வருத்தப்பட்டேன்.

Bayilvan Ranganathan Bollywood ankita lokhande

யார் அந்த தயாரிப்பாளர்: என்னிடம் இவ்வளவு கேவலமாக கேட்பார்கள் என நினைக்கவில்லை. நான் ஒருமாதிரி நிலைகுலைந்து விட்டேன். கூடுதலாக பணம் கிடைக்கும், சிறந்த நடிகையாக வலம் வரலாம் என்றெல்லாம் சொன்னார்கள். உங்க தயாரிப்பாளருக்கு திறமையான நடிகையை விட, அட்ஜஸ்ட் செய்யும் பெண் தான் வேண்டும் என்றால் என்னை விட்டு விடுமாறு சொல்லி கடுமையாக திட்டி விட்டேன். ஆனால், அந்த தயாரிப்பாளர் தினமும் எனக்கு தொல்லை கொடுத்தார் என்று பேட்டியில் கூறியிருந்தார். இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி யார் அந்த தயாரிப்பாளர் என்று பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.

பயில்வான் ரங்கநாதன்: இதுகுறித்து, வீடியோ ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான அங்கிதா லோகாண்டா, தன்னை தென்னிந்திய தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக கூறியுள்ளார். படுக்கைக்கு அழைத்தார்கள் என்று எந்த நடிகையும் சொல்ல மாட்டாங்க, ஆனால், அந்த நடிகை அதை தைரியமாக சொல்லி இருக்கிறார். அந்த தயாரிப்பாளர் யார் என்று சொல்லுவதில் என்ன தயக்கம், அப்போ எதுவுமே நடக்கல, நடக்காததை சொன்னீங்களா விளம்பரத்திற்காக என்று அந்த நடிகையை விளாசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X