கர்ப்பமாகாம சேப்டியா இருங்க.. அந்த விஷயம் பற்றி கூச்சமின்றி பேசிய இலியானா.. விளாசிய பயில்வான்!

சென்னை: மக்களுக்கு சினிமா மீதும் நடிகர்கள் மீதும் ஆர்வம் இருப்பதால், அவர்களை பற்றி தெரிந்து கொள்ள பலருக்கு ஆர்வம். இதை நன்றாக தெரிந்து கொண்ட யூடியூப் தளங்கள் அதைபயன்படுத்தி காசு பார்த்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் தான் பயில்வான் ரங்கநாதன். தற்போது இவர் நடிகை இலியானா பற்றி படு மோசமாக பேசி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல மர்மங்கள் நிறைந்த இந்த திரையுலகில் பெண்கள் போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்படுகின்றனர். இதனால் சினிமாவில் பெண்கள் அவ்வப்போது அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாகி விடுகின்றனர். இந்த விஷயத்தை ஒருசிலர் மட்டுமே, மனம் நொந்து வெளியில் சொல்கின்றனர். சில வளர்ந்த நடிகைகள் அதை பற்றி வாய் திறப்பதே இல்லை. அந்த விஷயத்தைத் தான் சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் புட்டுபுட்டு பேசிவருகிறார்.

youtuber bayilvan ranganathan talks about Ileana DCruz

சேப்டியா இருங்க: தற்போது இவர், நடிகை இலியானா குறித்து பேசி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், விஜய் நடித்த நண்பர் படத்தில் நடித்தவர் தான் இலியானா. இவர், அண்மையில் காண்டம் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பேட்டி அளித்துள்ளார். எது எதுக்கு பேட்டி அளிக்க வேண்டும் என்ற விவஸ்தை இல்லையா. நான் தான் மோசமா பேசுவேன் என்பார்கள் ஆனால், இலியானா என்னைவிட மோசமா பேசுகிறார் என்றார்.

விளாசிய பயில்வான் ரங்கநாதன்: தொடர்ந்து பேசிய அவர், காண்டம் பயன்படுத்தும் போது உஷாராக இருக்க வேண்டும். அதை பயன்படுத்துவதற்கு முன், கையை வைத்து அதில், ஏதேனும் ஓட்டை இருக்கா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் அதை பயன்படுத்த வேண்டாம். ஏன் என்றால், அப்படி அதை பயன்படுத்தினால், எதற்காக அதை பயன்படுத்துகிறோமோ அதுவே வீணாகி கர்ப்பமடைந்துவிடுவீர்கள் என்று கூச்சமே இல்லாமல் பேசி உள்ளார். இதெல்லாம் ஒரு பேட்டியா என்று பயில்வான் இலியானாவை கழுவி ஊற்றி உள்ளார்.

திருமணம் செய்யாமலே குழந்தை பெற்றார்: தெலுங்கு திரை உலகின் மூலம் நடிகையாக அறிமுகமான இலியானா, தமிழில், 'கேடி' என்கிற படத்தில் அறிமுகமானார். ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவிலான வெற்றியை பெற்றுத் தரவில்லை. இதனால் இலியானா தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார். இவர் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இதையடுத்து, தமிழில் விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்து கம்பாக் கொடுத்தார். அந்த படம் ஹிட்டடித்தது. இவர் பிரபல நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் செபஸ்டியனை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே இது குறித்த தகவல் எதையும் தெரிவிக்காத நிலையில், திருமணம் செய்து கொள்ளாமலே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X