முற்றிப்போன இர்ஃபான் பஞ்சாயத்து..லைவில் பிரியாணி மேன் தற்கொலை முயற்சி.. நெட்டிசன்ஸ் அதிர்ச்சி

சென்னை: யூட்யூபில் பிரபலமான சேனல் இர்ஃபான்ஸ் வியூ. உணவுகளை விமர்சனம் செய்யும் இவரது சேனலுக்கு என்று பல சப்ஸ்க்ரைபர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள், விஜய் சேதுபதி, நெப்போலியன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுடன் இணைந்தும் இவர் வீடியோ போட்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபகாலமாக இவருக்கும், பிரியாணி மேன் என்பவருக்கும் சில பிரச்னைகள் போய்க்கொண்டிருந்த நிலையில்; யூட்யூப் நேரலையில் பிரியாணி மேன் தற்கொலை முயற்சி செய்துகொண்டார்.

உலகம் தற்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அனைத்து தளங்களிலும் டிஜிட்டல் வந்துவிட்டதால் பலரும் அதனை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமானவைகளை செய்துவருகின்றனர். அதில் அதிகம் பேர் செய்வது யூட்யூப் சேனல் ஆரம்பிப்பது. பல யூட்யூப் சேனல்கள் இருந்தாலும் தனித்துவமிக்க யூட்யூப் சேனல்களே நிலைக்கின்றன.

Irfan

பட்டையை கிளப்பும் இர்ஃபான்ஸ் வியூ: அப்படிப்பட்ட ஒரு யூட்யூப் சேனல்தான் இர்ஃபான்ஸ் வியூ. இர்ஃபான் என்பவர் நடத்திவரும் இந்த யூட்யூப் சேனலில் உணவு குறித்து பல வீடியோக்களை ஆரம்பத்தில் பதிவு செய்துவந்தார். அவரது எளிமையான பேச்சும், தேடி தேடி வித விதமாக உணவை சாப்பிட்டு அதுகுறித்த தனது ஒப்பினியனை பகிரும் வீடியோக்களை அப்லோட் செய்ததாலும் வெகு சீக்கிரத்திலேயே பிரபலம் ஆனார் இர்ஃபான். கிட்டத்தட்ட 4 மில்லியன் ஃபாலோயர்களை அவர் வைத்திருக்கிறார்.

பிரபலங்களுடன் இணைந்த இர்ஃபான்: உள்ளூரில் மட்டும் வீடியோ செய்துகொண்டிருந்த இர்ஃபான் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் வெளிநாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தார். அங்கிருந்து அவர் அப்லோட் செய்த வீடியோக்களும் பிரபலமடைந்தன.நடிகர் நெப்போலியன் மகனுக்காக அமெரிக்கா சென்றதும் குறிப்பிடத்தக்கது,. மேலும் தமிழ்நாட்டுக்குள் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி என பல பிரபலங்களுடன் உணவு அருந்திக்கொண்டே பேட்டி எடுக்கும் இவரை பலரும் ரசிக்கின்றனர்.

இர்ஃபான் திருமணம்: பல ஆண்டுகள் காதலித்து வந்த தனது காதலியை இர்ஃபான் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். இப்போது அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறார். மேலும் சமீபத்தில் அவர் வளைகாப்பும் கொண்டாடினார். முக்கியமாக அவரது தாய், மனைவி உள்ளிட்டோர் எல்லாம் இப்போது வீடியோவில் வர ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைகள்: இர்ஃபான் எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும் சந்தித்திருக்கிறார். அவர் பணம் வாங்கிக்கொண்டுதான் உணவுகளை விமர்சனம் செய்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க; மறுபக்கம் கடந்த வருடம் மே மாதம் ஒரு விபத்தையும் நிகழ்த்தினார். அதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இர்ஃபான் Vs பிரியாணி மேன்: சூழல் இப்படி இருக்க சமீபகாலமாகவே இர்ஃபானுக்கும் பிரியாணி மேன் என்ற யூட்யூபருக்கும் பிரச்னை நடந்துவருகிறது. அதாவது இர்ஃபான் பற்றியும், அவர் நடத்தியதாக சொல்லப்படும் கார் விபத்து பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதற்கு இர்ஃபானும் பதிலடி கொடுத்திருந்தார். இநிந்லையில் அபிஷேக் நேற்று யூட்யூப் லைவ்வில் வந்தார்.

அப்போது பல விஷயங்களை பேசிய அவர் திடீரென தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்துக்கொண்டிருந்த அவரது சப்ஸ்க்ரைபர்கள் பிரியாணி மேனின் தாய்க்கு த்லைபேசியில் தொடர்புகொண்டு விஷயத்தை சொன்னதும்; அவர் உடனடியாக பிரியாணி மேனை தடுத்துவிட்டார். அதுதொடர்பான வீடியோ பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. மேலும் தற்கொலை முயற்சி செய்வதே தவறு என்ற சூழல் இருக்கும் நிலையில் இவர் எதற்காக லைவ்வில் அதனை செய்கிறார். இதனை வைத்து அவர் அனுதாபம் தேடத்தான் முயற்சிக்கிறார் என்று அவருக்கு கண்டனங்களும் வலுத்துவருகின்றன.

தற்கொலை எதற்கும் தீர்வு இல்லை. மன அழுத்தம் ஏற்பட்டால் அல்லது தற்கொலை எண்ணம் வந்தால் அதிலிருந்து விடுபட தமிழக அரசின் உதவி மையம் - 104 அல்லது சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கவும்

More from Filmibeat

Read more about: irfan இர்ஃபான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X