16 வயசு சிறுவர்களை வைத்து ஆபாச வீடியோ.. யூடியூபர் திவ்யா உள்ளிட்ட 4 பேர் கைது.. என்ன நடந்தது?
சென்னை: சோஷியல் மீடியாவில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியே பிரபலமானவர் தான் திவ்யா. சிறுவர்களை வைத்து ஆபாச வீடியோக்களை எடுத்ததாக அளிக்கப்பட்ட் புகாரின் அடிப்படையில் யூடியூபர் திவ்யா, சித்ரா, கார்த்தி மற்றும் ஆனந்த் என்கிற 4 பேர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்கள் மூலம் ஏகப்பட்ட இளைஞர்கள் தங்கள் கற்பனைத் திறனை வெளிப்படுத்தி யூடியூப் சேனல்களை நடத்தி அதிகமான ரசிகர்களை கவர்ந்து சம்பாதித்து வருகின்றனர். உணவு சாப்பிடும் யூடியூப் சேனல்கள், காமெடி யூடியூப் சேனல்கள், கேம் விளையாடும் யூடியூப் சேனல்கள், டெக் சேனல்கள் என ஏகப்பட்டவை டிரெண்டாகி வருகின்றன.

ஆனால், ஒரு சிலர் ஆபாசமான விஷயங்களையும் வீடியோவாக வெளியிட்டு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றனர். திவ்யா கள்ளச்சி என அழைக்கப்படும் யூடியூபர் திவ்யா 16 வயது, 17 வயது சிறுவர்களை வைத்து ஆபாச படம் எடுத்தும் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அளிக்கப்பட்ட புகாரில் சிக்கியுள்ளார்.
கார்த்திக்குடன் திவ்யா: யூடியூபில் கார்த்திக் மாமா என பல வீடியோக்களை வெளியிட்டு திடீர் பிரபலமாக டிரெண்டானவர் தான் திவ்யா. கார்த்திக்கை காணோம் என்றும் கார்த்திக் தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் பல வீடியோக்களை வெளியிட்டு வந்த அவர், தற்போது சிறுவர்களை வைத்து ஆபாச வீடியோ எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆபாச வீடியோக்கள்: யூடியூப் பிரபலங்கள் சிலர் தனிப்பட்ட முறையில் பல தவறான வேலைகளையும் பார்த்து சைடு வருமானம் பார்த்து வருவதாக புகார்கள் கிளம்பி வரும் நிலையில், யூடியூபர் திவ்யா 18 வயது ஆகாத சிறுவர்களை நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோக்களை எடுத்து சில வாட்ஸப் சேனல்களுக்கு அனுப்பி பணம் சம்பாதித்து வருகிறார் என்றும் அந்த சிறுவர்களை கஸ்டமர் இடங்களுக்கும் அனுப்பி பாலியல் ரீதியான சீண்டல்களில் அவர்களை ஈடுபடுத்தியதாகவும் கிளம்பிய குற்றச்சாட்டில் தனது கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தை நல ஆர்வலர் புகார்: கடலூரை சேர்ந்த திவ்யா மற்றும் அவரது நண்பர்களுக்கு எதிராக மாவட்ட குழந்தைகள் நல ஆர்வலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த நவம்பர் மாதம் முதல் 16 வயது மற்றும் 17 வயது மதிப்புடைய 2 சிறுவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











