எருமை சாணி விஜய்க்கு திருமணம் முடிந்தது... வெளியான அழகிய புகைப்படங்கள்!
சென்னை : யூடியூப் சேனல் மூலம் பிரபலமான எருமை சாணி விஜய்க்கும் இன்று பெற்றோர் முன்னிலையில் திருமணம் முடிந்தது.
ஒருகாலத்தில் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட யூடியூப், இப்போது மாத சம்பளம் தரும் முதலாளியாக உருவெடுத்துள்ளது.
இதற்கு திறமை மட்டுமே போதும், முதலீடு தேவையில்லை. இந்த திறமையை வைத்து பல யூடியூப் சேனல்கள் மாதம் பல லட்சம் ரூபாய்களை வருவாயாக ஈட்டி வருகின்றனர்.

எருமை சாணி விஜய் : அந்த வகையில் எருமை சாணி என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய். இவரின் நகைச்சுவையான பேச்சும், திருட்டு முழிக்கும் என்றே ஏராளமான பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள். எருமை சாணி என்ற யூடியூப் சேனலில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் பலரும் வீடே கதி என்று இருந்த போது, எருமை சாணி சேனல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
சினிமாவில் என்ட்ரி : யூடியூப் சேனலில் கலக்கி வந்த எருமை சாணி விஜய், ஹிப் பாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு மற்றும் நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார். சினிமாவில் நுழைந்த வேகத்திலேயே படம் இயக்கும் ஆசைவர இயக்குநராக மாறினார்.

டி பிளாக் படத்தில் : இந்தாண்டு வெளியான டி பிளாக் படத்தை எழுதி இயக்கி இருந்தார் விஜய். இதில் அருள்நிதி ஹீரோவாக நடித்து இருந்தார். கல்லூரியில் நடக்கும் தொடர் கொலை குறித்து க்ரைம்,த்ரில்லர் பாணியில் உருவான டி பிளாக் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அருள் நிதியின் நண்பராக எருமை சாணி விஜய்யும் நடித்து இருந்தார்.
காதலியை கரம் பிடித்தார் : இந்நிலையில் எருமை சாணி விஜய்யின் திருமணம் இன்று பெற்றோர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமண புகைப்படத்தை விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று விஜய் தனது நீண்ட நாள் காதலி நக்ஷத்திராவுடன் நடந்த நிச்சயதார்த்த பகிர்ந்து இருந்தார்.

நட்சத்திரா : விஜய் மட்டுமில்லை நட்சத்திராவும் மீடியாவில் தான் இருக்கிறார். மாடலிங், விலாகர், ஃபேஷன் டிசைனர் என பலமுகங்களை கொண்டவர் நட்சத்திரா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாவில் வெளியிட்டுவந்த நிலையில், பெற்றோர் முன்னிலையில் தற்போது திருமணம் நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications











