மகா சிவராத்திரியில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த 'எருமை சாணி' ஹரிஜா.. குவியும் வாழ்த்து!

சென்னை: நடிகையும் எருமை சாணி யூட்யூபருமான ஹரிஜா ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

எருமை சாணி என்ற யூட்யூப் சேனலை நடத்தி பெரும் பிரபலமானவர் ஹரிஜா.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

இதேபோல் அதர்வாவின் 100 படத்திலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ஹரிஜா. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் ஹரிஜா. இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

மகா சிவராத்திரியில்..

மகா சிவராத்திரியில்..

தனது கணவருடன் கர்ப்பிணியாக இருந்த போது எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஹரிஜா, இட்ஸ் அ பாய் என பதிவிட்டுள்ளார். இந்த மகா சிவராத்திரியில் நாங்கள் ஒரு ஆண் குழந்தையால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார்.

திருவிளையாடல்

திருவிளையாடல்

ஹரிஜாகடந்த 2018ம் ஆண்டு தனக்கு கல்லூரி சீனியரும் காதலருமான அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் "திருவிளையாடல்" என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

கர்ப்பிணியாக இருந்த போது விதவிதமாக போட்டோ ஷூட்டுக்களையும் நடத்தி சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X