ஓவரா பேசி ஒரு படத்தை காலி பண்ணாதீங்க.. தக் லைஃப் படத்துக்கு ’எருமை சாணி’ புகழ் ஹரிஜா சப்போர்ட்!

சென்னை: யூடியூபர் விஜய்யுடன் சேர்ந்து 'எருமை சாணி' யூடியூப் சேனலில் ஏகப்பட்ட காமெடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஹரிஜா. தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ம் தேதி வெளியாவதற்கு முன்பும் தக் லைஃப் படத்தை பற்றித்தான் நாடு முழுவதும் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தனர்.

ஜூன் 5ம் தேதி படம் வெளியான பின்னரும், தேசிய அளவில் ட்ரோல் மெட்டீரியலாகவே தக் லைஃப் திரைப்படம் மாறிவிட்டது. விஜய்யின் பீஸ்ட், அஜித் குமாரின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா படங்களின் வரிசையில் தக் லைஃப் திரைப்படமும் சிக்கிக் கொண்டது.

Youtuber Harija supports Kamal Haasan and gives positive review to Thug Life
Photo Credit:

இந்நிலையில், தக் லைஃப் திரைப்படத்தை இந்த அளவுக்கு எல்லாம் கழுவி ஊற்றத் தேவையில்லை என்றும் படத்தை படமாக பார்த்தால் இதுவும் நல்ல படம் தான் என ஹரிஜா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு கமல்ஹாசனின் தக் லைஃப் படத்துக்கு தனது ஆதரவை கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்: ராஜ்கமல் நிறுவனம் மூலம் தக் லைஃப் படத்தை கமல்ஹாசன் பிரமாண்டமாக புரமோட் செய்தார். சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களை மட்டுமே அழைத்து தனியாகவும் ஒரு புரமோஷன் நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சரான ஹரிஜா ஞாயிற்றுக்கிழமையான இன்று இப்படியொரு வீடியோவை வெளியிட்டு தக் லைஃப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனத்தையும் ஓவர் நெகட்டிவிட்டி வேண்டாம் என்று பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளது.

தடுமாறும் தமிழ் சினிமா: இளம் இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் லப்பர் பந்து, குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி என அடுத்தடுத்து நல்ல நல்ல படங்களை குறைந்த பட்ஜெட்டில் எடுத்துக் கொடுத்து மிகப்பெரிய லாபத்தை பார்த்து வருகின்றனர். ஆனால், 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஒரு படத்தை படக்குழுவே முழுவதுமாக பார்த்து விட்டுத்தான் இப்படியெல்லாம் ஓவர் புரமோஷன் செய்கிறார்களா? அல்லது புரமோஷன் செய்தே படத்தை ஏமாற்றி ரசிகர்கள் தலையில் கட்டி விடலாம் என இப்படி பண்ணுகிறார்களா என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். முதல் நாளில் அடித்து பிடித்துக் கொண்டு படத்தை பார்க்கும் பலரும் உண்மையான ஃபேன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவர் நெகட்டிவிட்டி வேண்டாம்: புதிய படங்கள் வெளியானால் பார்த்துவிட்டு உங்களுக்கு பிடிச்சிருந்தா மற்றவர்களுக்கு சொல்லுங்க, இல்லையென்றால் விட்டு விடுங்க, அதை விட்டு விட்டு ஓவர் எதிர்பார்ப்பும் வேண்டாம் என்றும் படம் பிடிக்கவில்லை என்றால் அதை மொத்தமாக காலி செய்தாக வேண்டும் என்கிற நோக்கில் ஓவர் நெகட்டிவாக விமர்சனங்களையும், ட்ரோல் செய்வதையும் ரசிகர்கள் தவிர்க்க வேண்டாம் என்றும், எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கமல் சாரின் தக் லைஃப் படம் பார்க்க சென்றேன், எனக்கு படம் ரொம்பவே பிடித்திருந்தது என ஹரிஜா கூறியுள்ளார்.

விவசாயம் செய்யும் போது விண்வெளி நாயகா எதுக்கு?: இமய மலையில் இருந்து கமல்ஹாசன் உயிர் பிழைத்து, மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொள்ளும் போது "விண்வெளி நாயகா" பாட்டை போட்டிருந்தால் கூட ஓகே. விவசாயம் செய்யும் போது கிளைமேக்ஸில் விண்வெளி நாயகா பாட்டை எதுக்கு போட்டாங்கன்னு மட்டும் சொல்லுங்க ஹரிஜா என கமெண்ட் செக்‌ஷனில் ஹரிஜாவையும் சேர்த்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இது ஒரு விளம்பரம்னு போடுங்க என்றும் ஏன் இவ்வளவு பொறுமையா வந்து முட்டுக் கொடுக்கிறீங்க என்றும் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X