என்னோட டிரவுசருக்கு ரெஸ்ட் கிடைச்சிடுச்சு.. நிச்சயம் ஆனது குறித்து மனம் திறந்த பிரபல யூடியூபர் !

சென்னை: எப்போதுமே அரை டவுசரை போட்டுக் கொண்டு உள்ளூர் சந்து கடை முதல் வெளிநாடுகளில் உள்ள காஸ்ட்லி ஹோட்டல் வரை சென்று உணவு குறித்த விமர்சனத்தை எடுத்து வைத்து வரும் யூடியூபர் இர்ஃபானுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது.

திருமணத்திற்கு பிறகே தனக்கு நிச்சயம் ஆன செய்தியை அறிவிக்க வேண்டும் என நினைத்து வந்த அவருக்கு அவரது நண்பர்கள் நிச்சயதார்த்த வீடியோவை சமூக வலைதளங்களில் லீக் செய்து ஷாக் கொடுத்தனர்.

உடனடியாக ஆமாங்க எனக்கு நிச்சயம் ஆகிடுச்சு என ஃபுல் காஸ்ட்யூம் உடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து திருமணம் எப்போ என்பது குறித்தும் அறிவித்துள்ளார் இர்ஃபான்.

இர்ஃபான் வியூ

இர்ஃபான் வியூ

இர்ஃபான் வியூ எனும் யூடியூப் சேனலை நடத்தி வரும் யூடியூபர் இர்ஃபான் வித விதமான உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிட்டு ஃபுட் ரிவ்யூக்களை கூறி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார். அவர் ரசித்து ருசித்து சாப்பிடுவதை பார்த்தாலே ஆட்டோமேடிக்காக நமக்கும் பசி எடுத்து விடும்.

அரை டவுசர்

அரை டவுசர்

இர்ஃபானுக்கு அடையாளமே அவர் எப்போதுமே அனிந்திருக்கும் அரை டவுசர் தான். உள்ளூர் சாப்பட்டுக் கடை முதல் வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்களுக்கு சென்றாலும், தனது அரை டவுசரை அணிந்த படியே சென்று சாப்பிட்டு அது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்கி விடுவார்.

கமல் பாராட்டு

கமல் பாராட்டு

விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற உலக நாயகன் கமல்ஹாசன், இவரது யூடியூப் வீடியோக்களை ரசித்து பார்ப்பேன் எனக் கூறி, இவர் சாப்பிடுவதை பார்த்தால் எனக்கே பொறாமையா இருக்கும் என்றும் பாராட்டி இருந்தார். கமல் எல்லாம் என் ஷோவை பார்க்கிறார் என்று தெரிந்ததே எனக்கு கிடைத்த பாக்கியம் எனக் கூறியிருந்தார் இர்ஃபான்.

நிச்சயம் ஆகிடுச்சு

நிச்சயம் ஆகிடுச்சு

சமீபத்தில் ஜிம்முக்கெல்லாம் சென்று வொர்க்கவுட்டை ஆரம்பித்து இருந்த யூடியூபர் இர்ஃபானுக்கு நேற்று கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இர்ஃபான் நிச்சயதார்த்தம் குறித்து வெளியே சொல்லாமல் ரகசியம் காக்க நினைத்து இருந்த நிலையில், அவருக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அவரது நண்பர்கள் சிலர் நிச்சயதார்த்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து விட்டனர்.

திருமணம் எப்போ

திருமணம் எப்போ

திருமணம் முடித்த பிறகு மொத்த அனுபவத்தையும் ஒரு வீடியோவாக போடலாம் என நினைத்துக் கொண்டிருந்த இர்ஃபான் விவரம் வெளியே கசிந்து விட்டதை அறிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாப்பிள்ளை கோலத்தில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து எனக்கு நிச்சயம் ஆகிடுச்சு இன்னும் 4 மாதத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது என அறிவித்துள்ளார்.

டிரவுசருக்கு லீவ்

டிரவுசருக்கு லீவ்

எப்போதுமே நகைச்சுவை ததும்ப பேசி வரும் இர்ஃபான் தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் என்னோட டிரவுசருக்கு ஒரு நாள் லீவ் கிடைச்சிருக்கு என்று போட்டு தனது நிச்சயதார்த்தம் பற்றிய அறிவிப்பை வெளியிட ஏகப்பட்ட டிவி பிரபலங்கள், யூடியூபர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

கல்யாண சாப்பாடு

கல்யாண சாப்பாடு

ஏகப்பட்ட உணவுகளை ருசி பார்த்து ரிவ்யூ செய்து வரும் யூடியூபர் இர்ஃபானின் கல்யாணத்தில் எத்தனை வகை பிரியாணி இருக்கும் மெனு எப்படி இருக்கும் என்ன என்ன வெரைட்டி இருக்கும் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சில யூடியூபர்கள் கல்யாணத்துக்கு கண்டிப்பா கூப்பிடுங்க இர்ஃபான் என்றும் இப்பவே சீட் புக் பண்ணி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X