நெப்போலியன் மகன் திருமணம்.. ஜப்பானில் ஜாலி பண்ணும் இர்பான்?.. மா. சுப்பிரமணியம் என்ன சொன்னாரு?
சென்னை: இர்பான் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியம் பதில் அளித்துள்ளார். இர்பான் மனைவி ஆயிஷாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனைக்கு 10 நாட்கள் இயங்க தடை விதிக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
பிரபல உணவு யூடியூபரும் குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளருமான இர்பான் தனது குழந்தையின் பாலினத்தை கருவில் இருக்கும் போதே அறிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அப்போது அவர் மன்னிப்பு கோரியதால் அவர் மீது எந்தவொரு ஆக்ஷனையும் எடுக்கவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

ஆனால், தற்போது குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்டி அந்த வீடியோவை வெளியிட்ட நிலையில், அவருக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சோஷியல் மீடியா முழுவதுமே இர்பானை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
வெளிநாட்டில் இர்பான்: மருத்துவமனை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது குறித்தும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதையும் ஹைலைட் பண்ண அமைச்சர் மா. சுப்பிரமணியத்திடம் செய்தியாளர்கள் தப்பு செய்த இர்பான் மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க? அவருக்கு என்ன தண்டனை எனக் கேட்கும் போது அவர் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்றும் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
ஜப்பானில் இருக்கிறாரா?: நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் வரும் நவம்பர் மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள நிலையில், அதற்காக அமெரிக்காவில் இருந்து வாகனங்கள் மூலமாக கனடாவுக்கு சென்று அங்கிருந்து கப்பல் மூலமாக ஜப்பானுக்கு சென்றுள்ளார். நெப்போலியனை அமெரிக்காவுக்கே சென்று வீடியோ எடுத்து வைரலான இர்பான் தற்போது அவருடைய மகன் திருமணத்தில் கலந்துக் கொள்ள ஜப்பான் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாட்டிக்கிட்ட மருத்துவமனை: மருத்துவர் அனுமதித்த நிலையில், இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்த காட்சிகள் வெளியான நிலையில், மருத்துவர் அல்லாத நபரை தொப்புள் கொடியை வெட்ட சொன்னதற்காக அந்த மருத்துவமனை மாட்டிக்கிட்டு தவித்து வரும் நிலையில், இர்பான் ஜாலியாக வெளிநாட்டில் சுற்றி வருகிறார் என ரசிகர்கள் அவரது முந்தைய இன்ஸ்டா போஸ்ட்டுகளில் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
ஜெயிலுக்குப் போகணும்: இர்பான் தொடர்ந்து தப்பு மேல் தப்பு செய்து வருகிறார் என்றும் அவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதால் டிடிஎஃப் வாசன் சென்றது போல இவரும் ஜெயிலுக்குப் போகணும் என்றும் இவரை எளிதில் தப்பிக்க விடக்கூடாது என நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











