லியோவில் இணைந்த பிகில் பட நடிகர்.. லீக் செய்த யூடியூபர் இர்ஃபான்.. பிரியா ஆனந்தும் காஷ்மீரில்!

சென்னை: இர்ஃபான் வியூ யூடியூப் சேனலை நடத்தி வரும் யூடியூபர் இர்ஃபான் காஷ்மீரில் லியோ படப்பிடிப்புக்கு சென்று அங்கே எடுத்த வீடியோவையே வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ஹாட் அப்டேட்களை கொடுத்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

ஜாலி டூர் சென்றிருப்பதை போலவே படக்குழுவினர் ஏகப்பட்ட வீடியோக்களை அவர்களாகவே வெளியிட்டு வருகின்றனர்.

லியோவில் இணைந்தாரா இர்ஃபான்

லியோவில் இணைந்தாரா இர்ஃபான்

சென்னையில் இருந்து காஷ்மீருக்கு பறந்து போன யூடியூபர் இர்ஃபான் அங்கே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். அத்துடன் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த லியோ குழுவையும் வீடியோ எடுத்தும் வெளியிட்டு தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார். இர்ஃபான் லியோ படத்தில் இணைந்து விட்டார் என்றே ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.

பிகில் கதிர்

பிகில் கதிர்

வீடியோ எடுத்த இர்ஃபான் சும்மா இல்லாமல் சீக்ரெட்டாக லியோ படத்தில் நடித்து வரும் நடிகர் கதிரை வீடியோ எடுத்து அம்பலப்படுத்தி விட்டார். உன்னை உள்ளே விட்டதுக்கு.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட என ரசிகர்கள் இர்ஃபானுக்கு நன்றி சொல்லி ஜாலியாக கலாய்த்து வருகின்றனர். இர்ஃபான் வீடியோ எடுப்பதை பார்த்த கதிரின் ரியாக்‌ஷனும் அந்த வீடியோவில் அப்படித்தான் உள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் கதிர் கால்பந்தாட்ட கோச்சாக நடித்திருந்தது குறிப்பிடத்தகக்து.

பிரியா ஆனந்தும் காஷ்மீரில்

பிரியா ஆனந்தும் காஷ்மீரில்

நடிகை பிரியா ஆனந்தும் காஷ்மீரில் லியோ படப்பிடிப்பில் இருப்பதையும் வீடியோ மூலம் அம்பலப்படுத்தி உள்ளார் யூடியூபர் இர்ஃபான். செம க்யூட்டாக சிரிக்கும் பிரியா ஆனந்த் இர்ஃபான் உடன் இணைந்து ஜாலியாக விளையாடும் காட்சிகளும் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறது.

இர்ஃபான் உடன் விளையாட்டு

நடிகை பிரியா ஆனந்தை லக்கேஜ்ஜுகளை வைத்துக் கொண்டு இழுத்துச் செல்லும் ட்ராலியில் உட்கார வைத்து யூடியூபர் இர்ஃபான் இழுத்துக் கொண்டு செல்லும் விளையாட்டுகளையும் அந்த வீடியோவில் வெளியிட்டு பலரையும் பயங்கர கடுப்பாக்கி உள்ளார் இர்ஃபான்.

விஜய், த்ரிஷா மிஸ்ஸிங்

விஜய், த்ரிஷா மிஸ்ஸிங்


இர்ஃபான் வீடியோவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் அட்மின் ஜெகதீஷ், கதிர் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட லியோ படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர். நல்ல வேளையாக விஜய் மற்றும் த்ரிஷா மட்டும் மிஸ் ஆகி விட்டனர் என விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இல்லை என்றால் குட்டி லியோ படத்தையே இர்ஃபான் காட்டியிருப்பார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

காஷ்மீரில் விருந்து

காஷ்மீரில் விருந்து

லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நிறைவடைந்துள்ளதாகவும் அதனை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட விருந்தில் தான் இர்ஃபான் கலந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓரிரு நாளில் விஜய் உள்ளிட்ட ஒட்டுமொத்த லியோ படக்குழுவும் சென்னை திரும்ப உள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X