ஜப்பான் கோயிலில் இர்பான் பார்த்த ஜோசியம்.. வாழ்க்கையில எல்லாமே அபசகுனமாத்தான் நடக்குமாம்?

சென்னை: நெப்போலியன் மகன் தனுஷ் திருமணத்துக்காக 20 நாட்களுக்கு முன்பே ஜப்பானுக்கு ஜாலி டூர் அடிக்க சென்ற இர்பானால் இங்கே 10 நாட்களாக மருத்துவமனை ஒன்று இயங்கவே முடியாமல் படாதபாடு பட்டுக் கிடந்தது. ஜப்பானில் இருந்து திரும்பி வந்த இர்பானுக்கு இன்னமும் எந்தவொரு தண்டனையும் கொடுக்கப்படவில்லையே என எதிர்க்கட்சிகள் கேட்கும் அளவுக்கு நிலைமை இருந்தாலும் அவர் ஜாலியாக அனைத்து வீடியோக்களையும் எடிட் செய்து வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு ஜப்பானை சுற்றிக் காட்டி வருகிறார்.

ஃபுட் ரிவ்யூவரான இர்பான் தனது இர்பான் வியூ யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள ஜப்பான் சீரிஸ் வீடியோக்கள் தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. கமெண்ட் பக்கம் முழுவதும் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து ட்ரோல் செய்தாலும் அவரது ரசிகர்கள் வீடியோக்களை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

youtuber irfan nepolean japan

மேலும், நெப்போலியன் தனது மகனுக்கு செய்து வைத்த திருமணத்தையும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், தற்போது ஜப்பான் கோயில் ஒன்றை சுற்றிப் பார்த்த இர்பான் அங்கே ஜோசியம் பார்த்த காட்சிகளையும் ஷேர் செய்திருக்கிறார்.

ஜப்பானில் இர்பான்: நெப்போலியன் மகன் தனுஷுக்கும் அக்‌ஷயாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் சினிமா பிரபலங்களான சரத்குமார், ராதிகா, மீனா, குஷ்பு, பாண்டிராஜ் மற்றும் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். யூடியூபர் இர்பான் நெப்போலியனுக்கு ரொம்பவே நெருக்கமாக மாறிவிட்ட நிலையில், 20 நாட்கள் முன்பாகவே ஜப்பானுக்கு சென்ற அவர் அங்கே ஏகப்பட்ட வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

ஜப்பான் கோயிலில் ஜோசியம்: சுமார் 100 யென்கள் கொடுத்து ஜப்பான் கோயில் வெளியே இருக்கும் பகுதியில் இர்பான் ஜோசியம் பார்த்த காட்சிகளை வெளியிட்டுள்ளார். கிளி எடுத்துக் கொடுப்பது போல அவருக்கு வந்த எண்ணில் இருக்கும் சீட்டை எடுத்துப் பார்த்த இர்பான் அப்படியே ஷாக் ஆகிவிட்டார். இந்த அளவுக்கு அபசகுனமாக தனது வாழ்க்கையில் யாருமே ஜோசியம் சொன்னதில்லை என்றும் அவர் புலம்பியுள்ளார்.

எல்லாமே அபசகுனம்: நினைத்த காரியம் நடக்காது. பயணத்தால் பிரச்சனை ஏற்படும். உங்களுக்கு தொடர்ந்து பலதரப்பட்ட பிரச்சனைகளும் சிக்கல்களும் வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது, நினைத்தது நடக்காது. எல்லாமே தவறாகத்தான் முடியும் என வந்துள்ளதை படித்துக் காட்டியே நம்மள முடிச்சிவுட்டீங்க போங்க என அப்செட் ஆகிவிட்டார்.

பணம் குவியும்: அந்த ஜோசியம் சரியில்லை என்று நினைத்து இன்னொரு ரேகை ஜோசியரிடம் சென்று கையை நீட்ட அந்த கோட் போட்ட ஜப்பான் தம்பி ஆள் ரொம்ப வசதியான பார்ட்டி போல ஜப்பானுக்கு வந்து வீடியோ எல்லாம் எடுத்து ஜோசியம் பார்க்குதுன்னு உங்களிடம் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் என நல்லதா நாலு வார்த்தைகள் சொல்ல, செலவழித்த 2 ஆயிரம் ரூபாய்க்கு செவி குளிர்ந்தது என வீடியோ போட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்: முதலில் பார்த்த ஜோசியமும் சரிதான். இரண்டாவது பார்த்த ஜோசியமும் சரிதான் என நெட்டிசன்கள் இர்பான் வீடியோவுக்கு கீழ் கமெண்ட் அடித்து வருகின்றனர். எல்லாமே பித்தலாட்டம் என்றும் அங்கேயும் இது போல ஏமாற்று விஷயங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் கொட்டிக் கிடப்பதை காட்டியிருக்கிங்க சூப்பர் பாஸ் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X