Irfan's View : பிரபல யூடியூபர் இர்பான் திருமணம் எப்போது தெரியுமா... தடபுடலான ஏற்பாடு!
சென்னை : பிரபல யூடியூபர் இர்பானின் திருமண ஏற்பாட்டு வேலைகள் தடபுடலாக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
யூடியூபரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை ரசித்து ருசித்து விமர்சனம் செய்வதே இவரின் தனி ஸ்டைல்.

யூடியூபர் இர்பான் : யூடியூபரான இர்பானுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு, உள்ளுர் முதல் வெளியூர் வரை எங்கு உணவு நன்றாக கிடைக்குமோ அங்கு தேடி சென்று உணவின் தரம் குறித்தும் ருசி குறித்தும் வீடியோவாக வெளியிட்டு சோசியல் மீடியாவில் பதிவு இடுவார். இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ரசித்து ருசித்து சாப்பாடு : இர்பான் ரசித்து ரசித்து சாப்பிடுவதை பார்க்க நமக்கே வாயில் எச்சில் வடியும் அந்த அளவுக்கு உணவை ரசித்து சாப்பிடுவார். இந்த நிகழ்ச்சியின் மூலம், இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது. உலகநாயகன் கமலஹாசன் கூட இர்பானின் யூடியூப் வீடியோக்களை ரசித்து பார்ப்பேன் என்று கூறியிருந்தார்.
திருமணம் நின்றது : கடந்த ஆண்டு இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது, திருமணம் குறித்து இர்பான் வாய் திறக்காமல் இருந்தபோது, இவருடைய நண்பர்கள் நிச்சயதார்த்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்கள். பின் திருமணம் நின்று போனது என்று இர்பான் உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிரம்மாண்ட திருமணம் : இதையடுத்து, யூடியூபர் இர்பானுக்கு வருகிற மே 14ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறார் இர்பான். குறிப்பாக திரையுலக பிரபலங்களையும், அரசியல் பிரபலங்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். தனது நெருங்கிய சொந்தங்களுக்கு பரிசு பொருளுடன் அழைப்பிதல் கொடுத்து வருகிறார்.

கமலஹாசனுடன் இர்பான் : அண்மையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தனது குடும்பத்தினருடன் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார். அதே போல, கமல்ஹாசனை நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியுள்ளார். தனது அம்மா, சகோதரியுடன் கமலை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் வைரலாகின.



Click it and Unblock the Notifications











