லியோ படப்பிடிப்பில் நடந்த தரமான சம்பவம்.. சூப்பர் பீலிங் அனுபவத்தை பகிர்ந்த யூடியூபர் இர்பான்!

சென்னை: லியோ படப்பிடிப்பில் நடந்த தரமான சம்பவத்தை யூடியூபர் இர்பான் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒட்டு மொத்த திரைத்துறையும் விஜய்யின் லியோ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் 19ந் தேதி வெளியாக உள்ளது.

தமிழகத்தில் முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் தொடங்குகிறது, இது ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி தான். ஆனால் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு படம் வெளியாகும்.

youtuber irfan shared Vijays leo shooting spot photos

விஜய்யுடன் இர்பான்: இந்நிலையில் பிரபல யூடியூபரான முகமது இர்பான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜய்யுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும், லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், லியோ படத்தில் விஜய்யுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் சாரை முதலில் பார்க்கும்போது சற்று பயமாக இருந்தது. ஒரு பள்ளியில் கண்டிப்பான ஆசிரியர் எப்படி இருப்பாரோ அதே போலவே இருந்தார். அவரே என் மீது தோளில் கையை போட்டு கொண்டு சகஜமாக பேசினார்.

சூப்பர் பீலிங்: பின் நான் என்னுடைய வீடியோவை பார்த்திருக்கீர்களா? என்று கேட்டேன் அதற்கு நான் பார்த்திருக்கிறேன் என்று கூறினார். பின் புகைப்படம் எடுத்துவிட்டு செல்லும்போது என்னை கட்டியணைத்து என்னுடைய திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த தருணங்களை நான் மறக்கவே மாட்டேன்.. இது ஒரு சூப்பர் பீலிங் என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

3 லட்சம் பாலோவர்கள்: இர்பான் வியூஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் முகமது இர்பான். இவர் தனது யூடியூப் சேனலில் விதவிதமான உணவு வகைகள் குறித்தும் லைஃப் ஸ்டைல் குறித்தும் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இர்பானின் வீடியோக்களுக்கு என்று பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்களை கொண்டுள்ளார் இர்பான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X