நெப்போலியன் மகன் ஹல்தி நிகழ்ச்சியில் இர்பான் என்னலாம் பண்றாரு பாருங்க.. கார்த்தி சொன்ன வார்த்தை!

சென்னை: குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்த வீடியோவை வெளியிட்டு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய யூடியூபர் இர்பான் ஜாலியாக நெப்போலியன் மகன் திருமணத்தில் பங்கேற்ற வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். நெப்போலியன் மகன் திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற ஹல்தி மற்றும் சங்கீத் உள்ளிட்ட விஷயங்களை இர்பான் கவர் செய்து தனது யூடியூப் பக்கத்தில் தற்போது வெளியிட்டு ரசிகர்களின் வியூஸ்களை அள்ளி வருகிறார்.

இர்பானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மா. சுப்பிரமணியம் சொல்லியிருந்தார். அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விட்டதாகவும் இர்பான் இந்தியாவில் இல்லாத நிலையில், அவர் வந்தவுடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

youtuber irfan napolean son marriage karthi

சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு 10 நாட்கள் செயல்படக்கூடாது என தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நெப்போலியன் மகன் திருமணத்துக்காக ஜப்பான் சென்ற இர்பான் அங்கே எடுத்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜப்பானில் களைகட்டிய திருமணம்: அமெரிக்காவில் அரண்மனை போன்ற வீட்டில் வாழ்ந்து வரும் நடிகர் நெப்போலியன் தனது மகன் தனுஷ் பல வருடங்களாக ஜப்பானுக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டு வந்த நிலையில், அவருடைய திருமணத்தையே ஜப்பானில் நடத்த திட்டமிட்டு அமெரிக்காவில் இருந்து கனடா நாட்டுக்கு சாலை வழியாக பயணம் சென்று அங்கிருந்து கப்பல் வழியாக ஜப்பானுக்கு குடும்பத்துடன் சென்றடைந்தனர். நேற்று முன் தினம் ஜப்பானில் நெப்போலியன் திருமணம் செட்டிநாடு விருந்துடன் தமிழ் சினிமாவின் சில முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது.

நெப்போலியன் மகன் திருமணத்தில் இர்பான்: ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வரும் குக் வித் கோமாளி பிரபலம் இர்பான் நெப்போலியனின் வீட்டை எல்லாம் தமிழ் ரசிகர்களுக்கு சுற்றிக் காட்டி வீடியோக்களை போட்டு நெப்போலியனை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நெருக்கமாக்கினார். இந்நிலையில், நெப்போலியன் மகன் திருமணத்துக்காக சில வாரங்களுக்கு முன்பாகவே ஜப்பான் சென்ற அவர் ஏகப்பட்ட ஏற்பாடுகளையும் செய்துக் கொடுத்து ஹல்தி நிகழ்ச்சியையும் தனது யூடியூப் சேனல் மூலம் கவர் செய்துள்ளார்.

செம கலாட்டா: தனுஷ் மற்றும் அக்‌ஷயாவின் ஹல்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சி திருமணத்துக்கு முந்தைய நாள் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துக் கொண்ட இர்பான் அங்கே என்னவெல்லாம் நடந்தது என்பதை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் காட்டியுள்ளார். கலா மாஸ்டர் தனது நடனக் கலைஞர்களை வைத்து நடத்திய சங்கீத் நிகழ்ச்சி களைகட்டியது. மேலும், தென்னிந்திய உணவு வகைகளை ஜப்பானில் சமைத்து அங்கே வந்த விருந்தினர்களுக்கு கொடுத்து நெப்போலியன் அசத்தியது குறித்தும் பேசியுள்ளார்.

கார்த்தி சொன்ன வார்த்தை: ஜப்பான் படத்தில் நடித்த நடிகர் கார்த்தியும் ஜப்பானுக்கு சென்று ஹல்தி நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். இப்படியொரு அப்பா கிடைக்க தனுஷ் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார். சரத்குமார், ராதிகா, மீனா, குஷ்பு, பாண்டியராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பேசும் காட்சிகளும் இர்பானின் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ஜப்பானில் நெப்போலியன் மகன் திருமணம் முடிந்த நிலையில், இர்பான் சென்னைக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X