யூடியூபர் இர்ஃபானின் திருமணம் கோலாகலமாக நடந்தது.. திருமண போட்டோவை பகிர்ந்து நெகிழ்ச்சி பதிவு!

சென்னை : யூடியூபர் இர்ஃபானின் திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது.அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உணவு விமர்சகர் இர்ஃபான் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை ரசித்து ருசித்து விமர்சனம் செய்து வருகிறார்.

சுவையான உணவை தேடி தேடி சாப்பிடும் இர்பானை, உணவு பிரியர்கள் இர்பானின் தீவிர ரசிகர்களாக உள்ளனர்.

youtuber irfan shares Wedding photos on social media

இர்ஃபான்ஸ் வியூ : இந்த பொறப்புத்தான் நல்ல ருசிச்சி சாப்பிட கிடைத்தது என்ற பாடலுக்கு ஏற்றார் போல விதவிதமான உணவை ரசித்து ருசித்து, உணவை வர்ணித்து வர்ணித்து சாப்பிடுவார் இர்பான் . உள்ளுர் முதல் வெளிநாடு வரை, எந்த நாட்டில், எந்த ஊரில் என்ன உணவு சுவையாக இருக்கும் என்பதை இவரின் யூடியூப் சேனலை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

3.56 மில்லியன் பாலோவர்ஸ் : இவரது யூடியூப் சேனலை 3.56 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம், இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது. உலகநாயகன் கமலஹாசன் கூட இர்பானின் யூடியூப் வீடியோக்களை ரசித்து பார்ப்பேன் என்று ஒரு விருது நிகழ்ச்சியில் கூறியிருந்தார். தற்போது இர்பான் தனது சேனலில் உதயநிதி, கனிமொழி என அரசியல் தலைவர்களையும், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்.ஜே,பாலாஜி, நெப்போலியன்,கவின் போன்ற திரைப்பிரபலங்களையும் பேட்டி எடுத்து வருகிறார்.

youtuber irfan shares Wedding photos on social media

திருமண ஏற்பாடு : இதையடுத்து, யூடியூபர் இர்பானுக்கு குடும்பத்தினர் திருமண ஏற்பாடு செய்திருந்த நிலையில், திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்கும் வேலையில் மும்முரமாக இருந்தார். திரையுலக பிரபலங்களையும், அரசியல் பிரபலங்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். மேலும், தனது நெருங்கிய சொந்தங்களுக்கு பரிசு பொருளுடன் அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.

திருமண புகைப்படம் : இந்நிலையில், இர்பானின் திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. தனது திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இர்பான், என் வாழ்வின் காதலை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறேன். யாருக்காக என் இதயம் என் வாழ்நாளின் இறுதி வரை துடிக்குமோ, அவரைத் திருமணம் செய்துகொண்டேன். எனது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஆசிகளும் தேவை என பதிவிட்டுள்ளார். அவருக்கு திரைப்பிரபரலங்கள், அரசியல்கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

youtuber irfan shares Wedding photos on social media

திருமணம் நின்றது : கடந்த ஆண்டு இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது, திருமணம் குறித்து இர்பான் வாய் திறக்காமல் இருந்தபோது, இவருடைய நண்பர்கள் நிச்சயதார்த்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்கள். பின் திருமணம் நின்று போனது என்று இர்பான் உருக்கமான வீடியோவை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X