லியோ படத்திலும் பிரியாணி விருந்து ரெடி போல.. காஷ்மீருக்கு பறந்த பிரபல யூடியூபர்.. செம ஸ்பெஷல்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே ஹீரோயின் இல்லாமல் கூட இருக்கும் ஆனால், பிரியாணி இல்லாமல் இருக்காது என்பதை தொடர்ந்து மாநகரம் படத்தில் இருந்து விக்ரம் படம் வரை காண்பித்து வெளுத்து வாங்கி விட்டார்.

மாநகரம் படத்தில் முட்டை பிரியாணியில் ஆரம்பித்து, கைதி படத்தில் பிரியாணி டபரா மூடியையே தட்டாக்கி கார்த்தி சாப்பிடும் காட்சிகள் எல்லாம் வேற ரகம்.

மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி அந்த சிறுவனுக்கு பிரியாணியை சாப்பிடக் கொடுத்து கொலை செய்வார் மற்றும் விக்ரம் படத்தில் கல்யாண விருந்தில் யூடியூப் பிரபலங்கள் வந்து இன்னைக்கு ஒரு பிடி என பிடித்து இருப்பார்கள்.

ஹீரோயின் இல்லைன்னாலும்

ஹீரோயின் இல்லைன்னாலும்

கைதி படத்தில் கார்த்திக்கு ஹீரோயினே கிடையாது. ஆனால், பிரியாணி காட்சியை அட்டகாசமாக வைத்து ரசிகர்களை எச்சில் ஊற வைத்திருப்பார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அந்த வாலியில் பிரியாணியை எடுத்துக் கொண்டு டபரா மூடியில் போட்டு கார்த்தி சாப்பிடும் அழகே தனி தான். அதே போல விக்ரம் படத்திலும் நாயகன் கமலுக்கு ஜோடி கிடையாது. ஆனாலும், பிரியாணி சீன் வச்சே தீருவேன் என வெயிட்டுக் காட்டியிருப்பார் லோகேஷ் கனகராஜ்.

லியோவில் பிரியாணி இல்லாமலா

லியோவில் பிரியாணி இல்லாமலா

அடுத்து தளபதி விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் காஷ்மீரில் படத்தை இயக்கி வந்தாலும் இந்த படத்தில் பிரியாணி காட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தான் ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக எதிர்நோக்கி வருகின்றனர். விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி என நட்சத்திர பட்டாளமே நடித்தாலும் லோகேஷின் டிரேட்மார்க் ஆன பிரியாணி லியோ படத்திலும் கன்ஃபார்ம் என்பதற்கு சூப்பரான சிக்னல் ஒன்று கிடைத்துள்ளது.

காஷ்மீரில் இர்ஃபான்

காஷ்மீரில் இர்ஃபான்

பிரபல யூடியூபரான இர்ஃபான் காஷ்மீரில் இயக்குநர் லோகேஷ் கனகராஜை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டு மாஸ் காட்டியுள்ளார். மேலும், சில யூடியூபர்களும் காஷ்மீருக்கு பறந்து சென்றுள்ள நிலையில், இந்த முறை வேற மாதிரியான ஹைடெக் பிரியாணி காட்சி இடம்பெறும் என ரசிகர்கள் கணிக்கத் தொடங்கி உள்ளனர்.

லோகேஷ் உடன் செல்ஃபி

லோகேஷ் உடன் செல்ஃபி

இர்ஃபான் காஷ்மீருக்கு சும்மா டூருக்கு போயிருப்பாருப்பா என சொன்ன நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக லியோ படப்பிடிப்பு தளத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தையே பதிவிட்டு செம சூடான அப்டேட்டை சுவையாக கொடுத்திருக்கிறார் உணவுகளை ரிவ்யூ செய்யும் யூடியூபர் இர்ஃபான். லியோ படத்தில் இவரும் ஒரு சீன் வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X