மனைவியை பிரிந்துவிட்டாரா.. என் Lifeல என்ன ஆச்சு..மனம் திறந்த மதன் கௌரி!
சென்னை: பிரபல யூடியூபரான மதன் கௌரிக்கு கடந்த ஆண்டு தனது காதலி நித்யாவுடன் திருமணம் நடந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக, சோஷியல் மீடியாவில் தகவல் பரவியது. இதற்கு பதில் எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த மதன் கௌரி தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனவர் மதன் கௌரி. மக்களுக்கு அதிகம் தெரிந்திடாத பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை, மிகவும் தெளிவாக விவரித்து வீடியோ வெளியிடுவது மதன் கௌரியின் ஸ்பெஷல். ஆரம்ப காலத்தில், இவரது வீடியோக்கள் மீது சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து பல விதமான தகவல்களை தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் மக்களுக்கு அளித்து வருகிறார்.

மதன் கௌரி தனது யூடியூப் சேனல் தொடங்கியதற்கு முக்கிய காரணமே காதல் தோல்வி தான் என்பது அனைவருக்கும் தெரியும். பிரிந்து போன தனது காதலிக்கு எப்படியாவது தனது முகம் தெரியவேண்டும் என்பதற்காகவே யூடியூபில் சேனல் தொடங்கிய மதன் கௌரி முதல் முறையாக தனது காதலி குறித்தும் காதல் கதை குறித்தும் பேசினார். என் காதலியின் பெயர் நித்யா. மதுரையில் நான் 12 ஆம் வகுப்பு படித்த பள்ளியில் தான், நித்யாவும் படித்தார். ஆனால், பள்ளியில் இருவரும் நேராக பார்த்து பேசியது கூட இல்லை.
மதன் கௌரி காதல் கதை: இதையடுத்து, பள்ளிப் படிப்பு முடிந்து, பேஸ்புக் மூலம் தான், நித்யாவிடம் பேச ஆரம்பித்தேன். ஆரம்பத்தில், நட்பாக தான் பேச ஆரம்பித்தோம். அதன் பிறகு தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. மதுரை ரயில் நிலையம் ஒன்றில் வைத்து தான், முதல் முறையாக நித்யாவை நேரில் சந்தித்து பேசினேன். நாங்கள், வெவ்வேறு கல்லூரிகளில் தான் படித்தோம் அதன் பிறகு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த காதல் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டது பிரிவுக்கு நான் தான் காரணம்.
மனைவியை பிரிந்தார்: ஆனால், தற்போது நானும் நித்யாவும் சேர்ந்துவிட்டோம் எங்கள் காதலுக்கு பெற்றோர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறியிருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த வீடியோவை மதன்கௌரி தனது யூடியூபில் வெளியிட்டு இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதையடுத்து மதன்கௌரி சென்னையில்வாங்கிய வீடு குறித்து ஹோம் டூர் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில் அம்மா, தங்கை குறித்து பேசி இருந்தார். ஆனால், தனது மனைவி குறித்து அவர் எதுவுமே பேசாததால் இருவரும் பிரிந்து விட்டதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவியது.
என் லைப்ல என்ன பிரச்சனை: இதுகுறித்து இத்தனை நாள் பேசாமல் இருந்த மதன் கௌரி நேற்று தனது யூடியூப் சேனலில் தனது திருமண வாழ்க்கை குறித்து முதல் முதலாக பேசி உள்ளார். அதில், கடந்த ஓராண்டாக என் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று பல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. உண்மையில் நான் குடும்ப வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை என்றால் நானே முதலில் உங்களிடம் சொல்லுவேன். ஏன் என்றால் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது நீங்கள் தான் என்றார். இதனால், இணையத்தில் வரும் தகவல்களை யாரும் நம்பாதீங்க என்று மதன் கௌரி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











