சமந்தா மூஞ்சிலே ஏன் 3 லேயர் கரி பூசிருக்காங்க.. தி ஃபேமிலி மேன் 2 இயக்குநர்களை விளாசிய மதன் கெளரி!

சென்னை: வெறும் டிரைலரை பார்த்து விட்டு கருத்து சொல்ல வேண்டாம், முழு வெப்சீரிஸை பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள் என கொக்கரித்த இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேவை வெளுத்து வாங்கி உள்ளார் பிரபல யூடியூபரான மதன் கெளரி.

Recommended Video

The Family Man 2-வை வெளுத்து வாங்கிய Madan Gowri | Oneindia Tamil

யூடியூபில் பரபரப்பான வீடியோக்களை போட்டு வரும் மதன் கெளரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

ஏன் ஜெயம் ரவியின் பூமி படத்திலேயே மதன் கெளரியின் வீடியோவை தான் நாயகி நிதி அகர்வால் பார்த்துக் கொண்டிருப்பார்.

மன்னிப்பு கேட்காத இயக்குநர்கள்

மன்னிப்பு கேட்காத இயக்குநர்கள்

தமிழர்களின் உணர்வுகளை நன்றாக அறிந்தவர்கள் நாங்கள்.. நிச்சயம் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை இழிவாக காட்டவில்லை எனக் கூறிய இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே வெப்சீரிஸ் ரிலீஸ் ஆன பிறகு வெடித்த கண்டனங்களுக்கு எந்தவொரு பதிலும் இதுவரை கூறவில்லை.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை மது அருந்துபவராகவும், நாட்டை விட்டு வெளியேறி வாழ்பவராகவும் எந்த அளவுக்கு இழிவுப்படுத்தி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு இழிவுப்படுத்தி காட்டியதை முழு தொடரையும் பார்த்த ரசிகர்கள் தாங்க முடியாமல் இயக்குநர்களையும் இந்த தொடரில் நடித்த சமந்தாவையும் திட்டி வருகின்றனர்.

இந்தி பாட்டு

இந்தி பாட்டு

தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரியான முத்து தமிழ் பாடலை கேட்டுக் கொண்டிருக்கும் மிலிந்த் கதாபாத்திரம் இந்தி பாட்டை மாற்றும். மீண்டும் அவர் மாற்ற வரும் போது துப்பாக்கியை எடுத்து அந்த கதபாத்திரம் காட்ட தமிழ்நாட்டிலேயே தமிழ் போலீஸ் அதிகாரி அடங்கிப் போவதாக காட்சிப்படுத்தி இருப்பர்.

சென்னையை பற்றி

சென்னையை பற்றி

மேலும், வெள்ளத்தால் தத்தளிக்கின்றனர் பின்னர் தண்ணிருக்காக தவிக்கின்றனர் என மனோஜ் பாஜ்பாய் சென்னையை பற்றி பேசுவார். பருவ மழை முதல் நாள் பெய்த மழைக்கே மும்பையில் வாகனங்கள் நீச்சலடிக்கின்றன என சமூக வலைதளங்களில் ஒரு சர்ச்சையே நடைபெற்று வருகிறது.

மதன் கெளரி விளாசல்

மதன் கெளரி விளாசல்

முழு வெப் தொடரையும் பார்த்து விட்டு கமெண்ட் பண்ணுங்க என தி ஃபேமிலி மேன் தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே கூறியிருந்தார்கள். நான் முழு தொடரையும் பார்த்து விட்டேன். தமிழர்களை எந்த அளவுக்கு மோசமாக காட்ட முடியுமோ அந்த அளவுக்கு மோசமாக காட்டி உள்ளனர் என மதன் கெளரி வெளுத்து வாங்கி உள்ளார்.

மூணு லேயர் கரி

மூணு லேயர் கரி

மேலும், தி ஃபேமிலி மேன் சீசன் 2 தொடரில் ராஜி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சமந்தா மூஞ்சிலே ஏன் மூணு லேயர் கரியை பூசி இருக்காங்க என்றும் பங்கமாக கலாய்த்துள்ளார் மதன் கெளரி. உலகளவில் இப்படி நடிகர்களை டார்க் ஆக மாற்றி நடிக்க வைப்பதற்கு எதிராக பெரும் புரட்சியே நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X