இனி முரட்டு சிங்கிள் இல்லை...பேமிலியில் மிங்கிளான..யூடியூபர் பரிதாபங்கள் கோபி!

சென்னை : யூடியூபர் பரிதாபங்கள் கோபியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அவர்களுக்கு நண்பர்களும், யூடியூப் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் பரிதாபங்கள் எனும் தலைப்பில் வீடியோக்களை அப்லோடு செய்து காமெடியில் அசத்தி வந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர்.

பின்னர் இவர்கள் இருவரும் மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் இருந்து விலகிய தனியாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கி ஏளமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார்கள்.

யூடியூபர் கோபி

யூடியூபர் கோபி

யூடியூப்பில் இவர்கள் பதிவேற்றிய வீடியோக்கள் அனைத்தும் இளைஞர்களிடை மிகவும் பிரபலம். இவர்களின் வீடியோக்கள் வெளியாகி மில்லியன் கணக்கில் வியூக்களை அள்ளி யூடியூபில் டிரெண்டானது. நியூ இயர் பரிதாபம், குடி பரிதாபம், கொரோனா பரிதாபம், காதல் பரிதாபம், பிரேக்கப் பரிதாபம் என சகலத்தையும் ஒருகை பார்த்துவிட்டார்கள்.

நடிகராக மாறினர்

நடிகராக மாறினர்

இவர் பகிர்ந்த செய்தியாளர் பரிதாபம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது. இதையடுத்து, கோபி மற்றும் சுதாகாருக்கும் மேலும் அதிகமான ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. சோஷியல் மீடியாவில் இவர்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து,கோபி சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அந்த வகையில் ஹிப் ஹாப் ஆதி இயக்கிய மீசைய முறுக்கு, யாஷிகாவுடன் ஜாம்பி போன்ற படங்களில் நகைச்சுவை ரோல் நடித்துள்ளனர்.

கோலாகல திருமணம்

கோலாகல திருமணம்

பரிதாபங்கள் கோபிக்கு, யமுனா என்கிற பெண்ணுடன் கடந்த ஜூன் மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது அவருக்கு திருமணம் முடிந்துள்ளது. தடபுடலாக நடந்து முடிந்துள்ள கோபியின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் கோபியுடன் பணியாற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

முரட்டு சிங்கிள்

முரட்டு சிங்கிள்

பரிதாபங்கள் சுதாகருக்கு கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. முரட்டு சிங்கிள் சிங்கிள் என்று காலரை தூங்கிக்கொண்டு சுத்திக்கொண்டு இருந்த இருவருமே பேமிலியில் மிங்கிளாகி உள்ளனர். கோபிக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X