விஜய் கூத்தாடின்னா.. அப்போ உதயநிதி ஸ்டாலின் கூத்தாடி இல்லையா?.. இயக்குநர் ராஜ்மோகன் கேள்வி!

சென்னை: "பத்த வச்சிட்டியே பரட்ட" என்பது போல ஆளூர் ஷா நவாஸ் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து மாநாடு நடத்தியதில் இருந்தே சீமான் உள்ளிட்ட பலர் விஜய்க்கு எதிராக திரண்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற அண்ணல் அம்பேத்காரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு திருமாவளவன் வராதது குறித்து விஜய் டைரக்ட் அட்டாக் செய்தது விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுக கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷா நவாஸ் நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் தவெக தலைவர் விஜய்யை கூத்தாடி என பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கட்சியின் தலைவரும் நடிகர் தானே என்றும் உதயநிதி ஸ்டாலினும் நடிகர் தானே என ஏகப்பட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

vijay aloor shanavas tvk

விஜய்யை கூத்தாடின்னு சொன்னா அப்போ உதயநிதி ஸ்டாலின் கூத்தாடி இல்லையா என இயக்குநரும் யூடியூப் பிரபலமுமான ராஜ்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடுப்பான உதயநிதி: விஜய் அரசியல் குறித்த கேள்விகளை பத்திரிகையாளர் கேட்க நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என முன்னாள் நடிகரான உதயநிதி ஸ்டாலின் பேசிவிட்டு அந்த ஆளுக்கு என்ன தெரியும் என கடுப்பாக பேசியது சோஷியல் மீடியாவிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஷா நவாஸ் அப்படி பேசலாமா?: ஷா நவாஸ் தவெக தலைவர் விஜய்யை கூத்தாடி என பேசியதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் கிளம்பியுள்ளன. விஜய்யை கூத்தாடின்னு சொன்னா அப்போ உதயநிதி ஸ்டாலின் கூத்தாடி இல்லையா என இயக்குநரும் யூடியூப் பிரபலமுமான ராஜ்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநாட்டிலேயே விஜய் சொன்ன வார்த்தை: எம்ஜிஆர், ஜெயலலிதா என தமிழ்நாட்டை பல நடிகர்கள் ஆண்ட நிலையிலும், நான் வந்தாலும் கூத்தாடின்னு தான் கிண்டல் பண்ணுவாங்க என விஜய் தனதுசூ முதல் மாநாட்டில் பேசிய நிலையில், அதே வார்த்தைகளை பயன்படுத்தி ஆளூர் ஷா நவாஸ் பேசியிருப்பதை கண்டித்த ராஜ்மோகன் உங்க ஊர்ல எம்எல்ஏவாக நீங்க இருந்தாலும் ஒரு அரசு விழாவில் கூட உங்களுக்கு மரியாதை கிடைக்கவில்லையே ஏன் என யோசித்து இருக்கீங்களா என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

விஜய்க்கு எகிறும் மைலேஜ்: சீமான், திருமாவளவன், உதயநிதி ஸ்டாலின் என தொடர்ந்து விஜய்க்கு எதிராக அரசியல் தலைவர்கள் பேச ஆரம்பித்து இருப்பதே விஜய்யின் அரசியலுக்கான மைலேஜ் தான் என்றும் 2026ம் ஆண்டு தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்பாக விஜய்யின் அரசியல் நகர்வுகள் இன்னும் பூதாகரமாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X