பட்டும் திருந்தாத ரௌடி பேபி சூர்யா.. நண்பர் சிக்காவோடு கைது.. 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சென்னை: ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் கொலை மிரட்டல் விடுப்பதாக இளம் பெண் புகார் அளித்ததை அடுத்து இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
டிக்டாக் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. அதில், ஆபாச உடைகளை அணிந்தும், கெட்ட வார்த்தைகளை பேசியும் வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

சிறையில் இருந்து வெளியே வந்த சூர்யா தற்போது, ஆபாசமில்லாமல், கெட்டவார்த்தை பேசாமல் வீடியோவை வெளியிட்டு வந்தார்.
10 முறை கருக்கலைப்பு: யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ரௌடி பேபி சூர்யா, கணவர் தான் எனக்கு குடிக்க கற்றுக் கொடுத்தார். அவர் தான் என்னை விபச்சார தொழிலுக்கு அனுப்பினார். அப்படி நான் கஷ்டப்பட்டு கொண்டுவரும் பணத்தையும் குடித்துவிடுவார். இதுவரை 10 முறை கருக்கலைப்பு செய்து இருக்கிறேன் என கூறியிருந்தார்.
ரௌடி பேபி கைது: ஆபாசமாக பேசிய வழக்கில் கடந்த ஓராண்டாக சிறையில் இருந்து வெளியில் வந்த ரௌடி பேபி மீது மீண்டும் ஓர் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ரவுடி பேபி சூர்யா மீது மதுரை காவல் ஆணையரிடம் ஆகஸ்ட் 22ஆம் தேதி புகார் அளித்தார். அந்தப் புகாரில் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது ஆண்நண்பர் சிக்கந்தர் உள்பட 4 பேர் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்திருந்தார்.
9 பிரிவில் வழக்கு: இந்தப் புகாரை விசாரித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் ஜோடியை கைதுசெய்தனர். இவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வழக்கில் மொத்தம் 4 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











