இந்த வயசுலயும் உங்களுக்கு 12 மணி வீடியோ கேக்குதா? பயில்வானை விளாசிய திருச்சி சாதனா?
சென்னை: திவ்யா கள்ளச்சி சிறுவர்களை வைத்து ஆபாச படமாக எடுப்பதாக சித்ரா என்ற யூடியூபர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார். இதையடுத்து, திவ்யா கள்ளச்சி, சித்ரா, ஆனந்த், கார்த்தி ஆகியேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், சித்ரா அளித்த பேட்டியில், திருச்சி சாதனா, ரௌடி பேபி சூர்யா, சிக்கா என பல யூடியூபர்களின் நிர்வாண வீடியோ இருப்பதாகவும், திவ்யா கள்ளச்சியின் போனை ஆய்வு செய்தால் அதில் ஆதாரம் கிடைக்கும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசியிருந்தார். அதில் திருச்சி சாதனா, ரவுடி பேபி, சிக்கா ஆகியோர் வாட்ஸ் அப்பில், தனியாக ஒரு குரூப் வைத்துக்கொண்டு அதில் ஆபாச வீடியோவை வெளியிட்டு ரேட் பேசி வருகிறார்கள். இந்த வீடியோவிற்கு இவ்வளவு என தனித்தனியாக ரேட் பேசி வருகிறார்கள் என்று பேசி இருக்கிறார். இதுகுறித்து பேசிய சாதனா, பயில்வான் எதுவும் சரியாக தெரியாமல் என்னுடன் பேசக்கூடாது. நேரடியாக அவர் என்னுடன் விவாதிக்க தயாராக இருந்தால் இதற்காக நான் பதில் அளிப்பேன் என பேசி இருந்தார்.

நேரடி மோதல்: இதைத்தொடர்ந்து கிங்ஸ் 24x7 youtube சேனலில் திருச்சி சாதனா பயில்வான் ரங்கநாதன் இருவருடைய கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது பயில்வான் ரங்கநாதன், நைட் 12க்கு யூடியூப் சேனலில் லைவில் வருவதற்கு என்ன காரணம் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த சாதனா, நான் பன்னிரண்டு மணிக்கு லைவ் போட்டதில்லை. நான் போட்ட ஒன்பது மணிக்கு போட்ட வீடியோவை 12 மணிக்கு நீங்கள் பார்த்துவிட்டு என்னை தவறாக பேசுவது தவறு. இந்த வயதிலும் நீங்கள் என்னுடைய வீடியோவை லைவில் பார்க்க வேண்டிய அவசியம் என்ன? இந்த வயதிலும் உங்களுடைய ரத்த ஓட்டம் கின் என்று இருக்கிறது அதனாலதான் 12 மணிக்கு என்னுடைய வீடியோவை பார்க்கிறீர்கள்.
18 லட்சம் கடன்: 2021ஆம் ஆண்டு சேனல் ஆரம்பித்து அதன் பிறகு 2022ஆம் ஆண்டு வீடியோ, ரீல்ஸ், ஷார்ட்ஸ் என்று பிரபலமாக இருந்தேன்.அதன் பிறகு, என் தனிப்பட்ட குடும்ப பிரச்சனை காரணமான அனைத்தையும் நிறுத்திவிட்டு. தற்போது நான் என் குடும்பம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். தற்போது படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால், சாதனா புது கார் வாங்கிவிட்டால், புது வீடு என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறீர்கள். வீடு இல்லாமல், என் குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டது. இதனால், நகை எல்லாத்தையும் விற்று வீடு கட்டினேன். இப்போது போட்டு இருக்கும் இந்த நகை, மோதிரம் எல்லாம் கவரிங் இப்போது எனக்கு மட்டும் 18 லட்சம் கடன் இருக்கிறது.
இப்போது சித்ரா கூறியிருக்கும் புகார் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது, நான் சித்ராவை இதுவரை நான் பார்த்ததே இல்லை. இதில் என் பெயரை இழுத்துவிட்டு தேவையில்லாமல் பேசுகிறார்கள். இதில் இருக்கும் உண்மை என்ன என்று தெரியாமல், நீங்களும் வீட்டில் இருக்கும் பெண்கள் பற்றி வாய்க்கு வந்ததை பேசக்கூடாது என்றார்


Click it and Unblock the Notifications











