மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்க காரணம் என்ன? பணம் கூட வேண்டாம்.. டிடிஎஃப் வாசன் வேதனை!
சென்னை: யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் அறிவித்துள்ள நிலையில், அந்த படத்தில் இருந்து நீக்கியதே எனக்கு தெரியாது, எல்லாத்தையும் நான் செய்தியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று டி.டி.எஃப்.வாசன் தெரிவித்துள்ளார்.
வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன். அவரை யூடியூப்பில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன், மஞ்சள் வீரர் படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை செல் அம் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்கிற படத்தை இயக்கி இருக்கிறார்.

மஞ்சள் வீரன்: மஞ்சள் வீரன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், "மஞ்சள் வீரன்" படத்திலிருந்து டி.டி.எஃப்.வாசனை நீக்குவதாக அப்படத்தின் இயக்குநர் செல் அம் அறிவித்திருந்தார். மேலும், அவர் தான் சூப்பர் ஸ்டார்.. ஆனா படத்துல இருந்து தூக்குறோம் என இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், படத்திற்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என்று தெரிவித்து இருந்தார்.
எனக்கு தெரியாது: இதுகுறித்து டி.டி.எஃப்.வாசன் தனது யூடியூப் சேனலில் பேசி உள்ளார். அதில், இயக்குநர் செல் அம்,என்னை படத்தில் இருந்து நீக்கியதே எனக்கு தெரியாது. இதுபற்றி அவர் ஒரு முறைக்கூட என்னிடம் பேசியது இல்லை. அதுமட்டுமில்லாமல், அவர் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி இருந்தார். ஆனால், மஞ்சள் வீரன் படத்தின் போட்டோஷூட் மட்டுமே நடந்தது.
படம் வேண்டாம்: அந்த முதல் நான் போட்டோஷூட் மற்றும் படபூஜைக்கு கூட நான் பணம் செலவு செய்தேன். அந்த பணத்தைக்கூட நான் கேட்க மாட்டேன். ஆனால், என்னிடம் சொல்லி இருக்கலாம், என்னிடம் எதையும் சொல்லாமல் நேரடியாக மீடியாவில் என்னை நீக்குவதாக சொல்லி இருக்கிறார். அது வருத்தம் அளிக்கிறது. அவருக்கு புது தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார். அவரே அந்த படத்தின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதை என்னிடம் அண்ணன் சொல்லி இருந்தால் கூட, நான் சரி அண்ணா பண்ணுங்க என்று சொல்லி இருப்பேன். ஆனால், மீடியாவில் என்னை நீக்கிவிட்டதாக சொல்லி இருக்கிறார்.
காரணத்தை சொல்லுங்கள்: இதுகுறித்து பேச நான், அவரை பலமுறை தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் என் அழைப்பை எடுக்கவில்லை. வேறு யார் யாரோ போனை எடுத்து சார் பிஸியாக இருப்பதாக கூறுகின்றனர். நான் செலவு செய்த பணத்தில் எனக்கு ஒரு பைசாக்கூட வேண்டாம், ஆனால், எதற்காக என்னை படத்தில் இருந்து நீக்கினார் என்ற காரணத்தை மட்டும் சொன்னால் போதும். வாழ்க்கையில் ஏற்கனவே எனக்கு பல பிரச்சனை இருக்கு இதில் இந்த பிரச்சனையா என்று டிடிஎப் வாசன் அந்த பேட்டியில் அழாத குறையாக பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











