TTF Vasan: டிடிஎஃப் வாசனுக்கு தலையில அடி.. மயக்கம் வந்துடுச்சி..கண்கலங்கிய நண்பன்!
சென்னை: (TTF Vasan)டிடிஎஃப் வாசன் ஹெல்மெட் போட்டு இருந்தாலும் தலையில் அடிபட்டு இருக்கு என்று வாசனின் நண்பன் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் வைகுண்ட வாசன்.
பிரபல யூடியூபரான இவர் மோட்டார் பைக்கில் வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வது, உலகம் முழுவதும் பைக்கில் ரைட் சென்று தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார்.

விபத்தில் சிக்கினார்: டிடிஎஃப் வாசன் நேற்று காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். 230 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ததால், அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அந்தர் பல்டி அடித்து சாலையோர தடுப்பில் மோதி நொறுங்கியது.
கை முறிவு: இதில், தூக்கி வீசப்பட்ட டி.டி.எப். வாசனுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. டி.டி.எப். வாசன் விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது. அதில், அவர் ஒரு காரின் அருகே வந்து வீலிங் செய்வது தெளிவாக தெரிவதால், இதெல்லாம் தேவையான என்றும், அவர் தற்காப்பு உடை அணிந்து இருக்கிறார். இவரால் மற்றவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்து இருந்தால் என்ன செய்வது என்று அவருக்கு எதிராக பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

வீலிங் செய்யல: இந்நிலையில், டி.டி.எப். வாசனின் நண்பரான அஸிஸ், வாசன் உண்மையில் வீலிங் செய்யவில்லை, அந்த நேரத்தில் அவருக்கு மயக்கம் வருகிறது என்று சொன்னார். நான் ஓரமா வண்டியை நிறுத்து என்று சொல்லிக்கொண்டே இருந்தேன் அதற்குள் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது. வாசன் எப்படி வீலிங் செய்வார் என்பது ரசிகர்களாகி உங்களுக்கே நன்றாக தெரியும். அவர் வேண்டும் என்ற அப்படி செய்யவில்லை.
தலையில் அடி: மேலும், வாசன் ஹெல்மெட் போட்டு இருந்தாலும், தலையில் நல்ல அடிபட்டுவிட்டது. அதற்காக சிடி ஸ்கேன் எடுத்து இருக்கிறோம். இப்போது தலையில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், ஸ்கேன் எடுக்கும் போது, வாசனால் சுத்தமா முடியல, என்னால அதைப் பார்க்கவே முடியல ரொம்ப கஷ்டமா இருந்தது என்று அஸீஸ் வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











