மஞ்சள் வீரன் படத்திலிருந்து டி.டி.எஃப்.வாசன் நீக்கம்.. இயக்குநர் செல் அம் அறிவிப்பு!

சென்னை: யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். டி.டி.எஃப்.வாசனை விபத்தில் சிக்கிய போதும், வழக்கில் சிக்கிய போதும், சகோதரர் போல உடன் இருந்த இயக்குநர் செல் அம் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை.

வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன். அவரை யூடியூப்பில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன், மஞ்சள் வீரர் படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை செல் அம் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

ttf vasan manjal veeran ttf

மஞ்சள் வீரன்: மஞ்சள் வீரன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு பைக்கை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்கியதை அடுத்து, பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தனது யூடியூப் சேனல்வாசிகளை குஷிப்படுத்துவதற்காக கேமராவை எடுத்துக்கொண்டு காரில் ஊர் சுற்றி வருகிறார்.

டி.டி.எஃப்.வாசன் நீக்கம்: இந்நிலையில்,"மஞ்சள் வீரன்" படத்திலிருந்து டி.டி.எஃப்.வாசனை நீக்குவதாக அப்படத்தின் இயக்குநர் செல் அம் அறிவித்துள்ளார். மேலும், அவர் தான் சூப்பர் ஸ்டார்.. ஆனா படத்துல இருந்து தூக்குறோம் என இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த காரணத்திற்காக டி.டி.எஃப்.வாசனை நீக்குகிறார். இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்ற எந்த விவரமும் தெரியவில்லை. இதனால், டி.டி.எஃப்.வாசனின் ரசிகர்கள் என்ன காரணம் என்று கேட்டு இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இரண்டாவது படம்: டி.டி.எஃப்.வாசன் மஞ்சள் வீரன் படத்தை தொடர்ந்து, இரண்டாவது படமான ஐபிஎல் படத்தில் நடித்து வருகிறார். இந்தபடத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் ஆடுகளம் கிஷோர், நடிகை அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் டிடிஎஃப் வாசன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஐபிஎல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதால், இது கிரிக்கெட் சார்ந்த படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X