TTF Vasan: கையில் பாம்புடன் டிடிஎஃப் வாசன்.. வனத்துறை அதிகாரிகள் விசாரணை!
சென்னை: வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன். அவரை யூடியூப்பில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவர் கையில் பாம்புடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன், இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வீலிங் செய்து, அதை தனது யூடியூப் தளத்தில் பதிவிட்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார். youtube இல் வீடியோவை வெளியிட்டு, இப்படியெல்லாம் கூட பணம் சம்பாதிக்க முடியுமா? என்று பல இளைஞர்களை யோசிக்க வைத்தவர் தான் டி.டி.எப் வாசன். ஒரு காலத்தில் வாசன், தொட்டதெல்லாம் பொன்னானது என்று சொல்லும் அளவிற்கு, இவரது youtube மிகப்பெரிய வளர்ச்சி கண்டது.

டிடிஎஃப் வாசன்: அடுத்தடுத்து பல ஊர்களுக்கு டிராவல் வீடியோவை வெளியிட்டு பிரபலமானார். சில ஆண்டுகளுக்கு முன் தனது பிறந்த நாளில், தனது சப்ஸ்கிரைபர்களை சந்திக்க முடிவு செய்தார். இதில், இருந்து தான் இவருக்கு பிரச்சனையே ஆரம்பம் ஆனது. அந்த இடத்தில் இவரை பார்ப்பதற்கு அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால் அந்த இடத்தில், தள்ளு முள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் இவரை கைது செய்தன. அதன் பிறகு, ஜி.பி.முத்துவை வைத்துக்கொண்டு வேகமாக பைக் ஒட்டியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு வேகமாக பைக்கை ஓட்டி விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து அவர் 10 ஆண்டுகாலம் பைக் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் வீரன்: தனக்கு இருக்கும் பிரபலத்தை வைத்து ஹீரோவாக முடிவு செய்த வாசன், திருவீகா பூங்கா படத்தை இயக்கிய செல் அம் இயக்கத்தில் உருவாக இருந்த, மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக கமிட் ஆனார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது படத்திற்கு ஓர் ஆண்டுக்கு மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை நீக்கிவிட்டதாக படத்தின் இயக்குநர் அறிவித்தார்.
மீண்டும் சர்ச்சை: தற்போது டிடிஎஃப் வாசன் பாம்பை கையில் சுற்றி வைத்து கொண்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இது பேரு பப்பி.. காட்டுக்குள்ள டிரெக்கிங் போன போது, காட்டில் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தது. அதை நான் எடுத்துக்கொண்டு வந்து வளர்த்து வருகிறேன் என்று பேசிய இந்த வீடியோ டிரெண்டானதைத் தொடர்ந்து தற்போது வாசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். வாசன் பாம்பை வைத்து இருந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் நடத்த உள்ளனர்.


Click it and Unblock the Notifications











