விஜே சித்து காட்டில் செம மழை போங்க.. ஹீரோவாகப்போறாராம்.. இயக்குநர் யார் தெரியுமா?

சென்னை: தமிழ்நாட்டில் யூட்யூப் சேனல்கள் பெருகிவிட்டன. அதன் மூலம் பிரபலமடைந்தவர்களும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் விஜே சித்து. பல ஊர்களுக்கு சென்று அதனை வீடியோவாக தனது யூடியூப் சேனலில் பதிவேற்றுவார். அவரும், ஹர்ஷத் கானும் இணைந்து செய்யும் லூட்டிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேருமே தற்போது திரைத்துறைக்கும் வந்திருக்கிறார்கள். டிராகன் படம் அவர்களுக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்தது.

ஒருவரிடம் யூட்யூப் சேனலும்; அதனை மக்களிடம் ரீச் செய்யக்கூடிய திறமையும் இருந்தால் போதும் அவர் பிரபலம் ஆகிவிடலாம். அப்படி பிரபலமானவர்கள் தமிழ்நாட்டில் ஏராளமானோர் இருக்கிறார்கள். முன்பெல்லாம் சினிமாவுக்குள் நுழைய சின்னத்திறை வெகுவாக கை கொடுத்தது. இப்போதோ யூட்யூப் சேனல்கள் பெரும்பாலும் கைகொடுக்கின்றன. அதனை வைத்து சினிமாவுக்குள் வந்து பிரபலமடைந்தவர்கள், சினிமாவுக்குள் வராமலேயே பிரபலமடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

விஜே சித்து: அப்படி தமிழ்நாட்டில் ஃபேமஸான யூடியூபர்களில் ஒருவர்தான் விஜே சித்து. முதலில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த அவர் பிராங்க் செய்வதன் மூலம் பிரபலமடைந்தார். அதனையடுத்து தனக்கென சொந்தமாக ஒரு யூடியூப் சேனலையும் தொடங்கினார். அவருடன் ஹர்ஷத் கானும் இணைந்துகொண்டார். மேலும் சிலரும் அவருடன் இணைந்து பணியாற்றினார்கள். சேனலுக்கு அதிரிபுதிரி ரெஸ்பான்ஸ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செம ஃபாலோயர்ஸ்: பல ஊர்களுக்கு சென்று அதை வீடியோவாக பதிவேற்றுவதுதான் விஜே சித்துவின் வேலை. பல வீடியோக்கள் மில்லியன் கணக்கில் வியூஸை அடித்திருக்கின்றன. அதேசமயம் அவர் வீடியோவில் தன்னுடன் இருப்பவர்களை அடிப்பது, மட்டமாக பேசுவது என செய்வதும் பல நேரங்களில் விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. மேலும் அதனை மட்டும் அவர் கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் அவ்வப்போது கோரிக்கைகளை வைப்பதுண்டு.

Youtuber VJ Siddhu is going to direct a film and play the hero

நல்ல மனிதர்: அதேசமயம் சித்து பக்கம் குறைகள் இருந்தாலும் அவர் வீடியோக்களில் இருக்கும் மனிதமும், அவர் அடிக்கும் கவுன்ட்டர்களும் தங்களை முழுமையாக திருப்திப்படுத்துகின்றன என்று அவரது ரசிகர்கள் சொல்வார்கள். சமீபத்தில்கூட அவர் நாட்டுப்புற கலைகள் பற்றிய சீரியஸ் ஒன்றை செய்தார். அதில் ஒரு நாய்க்குட்டியை அவர் தத்தெடுத்த விஷயம் பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் இலங்கை சீரியஸில் கருங்காலி மாலை குறித்து பேசியிருந்த விஷயமும் பயங்கர்மாக ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

டிராகனில் சித்து, ஹர்ஷத்: யூடியூபில் பிரபலமாக இருந்த விஜே சித்துவும், ஹர்ஷத்தும் எப்போது சினிமாவுக்குள் வருவார்கள் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். சித்து ட்ரிப் என்ற படத்திலும் ஹர்ஷத் கான் ப்ளாக் ஷிப் என்ற படத்திலும் நடித்தார்கள். ஆனால் பெரிதாக வரவேற்பு இல்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் அண்மையில் வெளியான டிராகன் படத்தில் இரண்டு பேரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மிக அருமையாக நடித்திருந்த இரண்டு பேருக்குமே பெரிய அப்ளாஸ் கிடைத்திருக்கிறது.

ஹீரோவாகும் விஜே சித்து?: இந்நிலையில் விஜே சித்து குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது விஜே சித்து ஒரு படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும்; அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி படத்தின் அறிவிப்புக்காக ஒரு ப்ரோமோ ஷூட்டையும் அவர்கள் நடத்தினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் விஜே சித்து ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X