இணையத்தளம் மூலம் இணைந்து செயல்பட்டு வெற்றிவாகை சூடியவர்கள்
சென்னை: பிளாக் சீப் புகழ் 'கார்த்திக் வேணுகோபாலன்' இயக்கத்தில் உருவான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படம் 14 ஜீன் 2019ல் வெளியானது . இந்த படத்தில் பல யூடியூப் பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் .
இந்த படத்தில் 'இன்டர்நெட்டு பசங்க' என்ற பாடல் இடம்பெற்றிருந்தது, அதில் தற்போது டிரென்டிங்கில் இருக்கும் அத்தனை யூடியூப்பர்களை அழைத்து ஆட வைத்து அந்த பாடலை எடுத்திருப்பார்கள். எதிர்காலத்தில் எல்லோரும் பெரிய உயரத்தில் இருக்கும் போது தங்கள் படத்தில் தான் அனைவரும் அறிமுகமானார்கள் என்று சொல்வதற்கு பிளாக் சீப் குழு எடுத்த சின்ன முயற்சிதான் இது.

யூடியூப்பில் ஒரு தனியார் ஊடகத்தின் மூலம் தற்போது இந்த 'இன்டர்நெட்டு பசங்க' பாடலின் உருவாக்கம் வீடியோ வெளியிடபட்டிருக்கிறது . இதில் யூடியூப்பக்கங்களின் சார்பில் பலர் கலந்து கொண்டு பேட்டியும் கொடுத்திருந்தனர் , அதில் முதலில் பிளாக் சீப் யூடியூப் பக்கத்தின் சார்பாக 'ஷரீப்' பேட்டி எடுத்தார் .

நக்களைட்ஸ் சார்பாக அருண்குமார்,நிவேதிதா,சசி,கவி ஆகியோர் பங்கேற்றனர். பரிதாபங்கள் சார்பாக கோபி மற்றும் சுதாகர் கலந்து கொண்டனர் .மைக் செட் சார்பாக ஶ்ரீராம் ,புனிதன் ,அபினாஸ் மேலும் சிலரும் கலந்து கொண்டனர் .மேலும் சில சேனல்களிலிருந்து சிலரும் ,யூடியூப் பக்க விமர்சகர்களான 'பாண்டா பிரசாந்த்' 'கோடாங்கி' 'செல்பி ரிவீயூ கார்த்தி ' ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாடலின் உருவாக்கத்தின் போது எடுக்க பட்ட பேட்டியும் அந்த வீடியோவில் இணைக்கபட்டது . இதில் நகைச்சுவையான பல கேள்விகளை பிளாக் சீப் 'ஷரீப்' அவர்களிடம் கேட்டார், அதற்கு பலரும் நகைச்சுவையான பதில்களை அளித்தனர் .

'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ' படத்தை போல மறுப்புறம் முழுக்க யூடியூப்பர்களை வைத்து 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படம் எடுக்கபட்டு வருகிறது .இது கூடிய விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications











