Yatra 2: அதிர்ச்சி.. தியேட்டரில் அடித்துக் கொண்ட ரசிகர்கள்.. மம்மூட்டி, ஜீவா படத்தால் திடீர் களேபரம்

ஹைதராபாத்: ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தான் சண்டை போடுகின்றனர் என நடிகர்கள் சும்மா வளர்த்து விட்டால் இதுதான் கதி என்பதற்கு ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற அடிதடி சம்பவம் ஒரு பாடமாக அமைகிறது. ஆந்திராவின் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக யாத்ரா 2 பிப்ரவரி 8ம் தேதியான இன்று வெளியானது.

மம்மூட்டி மற்றும் ஜீவா லீட் ரோலில் நடித்த இந்த படத்தை மகி வி. ராகவ் இயக்கி உள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் தியேட்டரில் படமாக்கப்பட்ட போது பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி ரசிகர்களுக்கும் இடையே திடீரென மோதல் வெடிக்க இரு தரப்பும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்ட காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

YS Jagan Mohan Reddy fans vs Pawan Kalyan fans fight at Yatra 2 screening

யாத்ரா 2: 2019ம் ஆண்டு யாத்ரா எனும் பெயரில் முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பற்றிய படம் வெளியானது. அவருக்கு பின்னர் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக எப்படி ஆனார் என்கிற கதையாக யாத்ரா 2 இன்று வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. நிகழ்கால அரசியல் களத்தை மையமாக வைத்து இப்படியொரு படத்தை உருவாக்குவதே பெரிய விஷயம் தான் என படக்குழுவினர் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சிகளில் பேசியிருந்தனர்.

YS Jagan Mohan Reddy fans vs Pawan Kalyan fans fight at Yatra 2 screening

தியேட்டரில் அடிதடி: தமிழ்நாட்டில் கூட விஜய், அஜித் ரசிகர்கள் என்னதான் சோஷியல் மீடியாவில் சண்டை போட்டாலும் வாரிசு, துணிவு ஒரே நாளில் வெளியான போது கூட இப்படி சண்டை போட்டுக் கொள்ளவில்லை. ஆனால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் திடீரென தியேட்டரில் அடிதடி சண்டையில் இறங்கிய வீடியோக்கள் சினிமா உலகினரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பவன் கல்யாண் vs ஜெகன் மோகன் ரெட்டி: ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் படமாக இந்த படம் உருவாகி உள்ள நிலையில், படத்தை பார்க்க வந்த பவன் கல்யாண் ரசிகர்கள் தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

YS Jagan Mohan Reddy fans vs Pawan Kalyan fans fight at Yatra 2 screening

நடவடிக்கை பாயுமா?: ஜெகன் மோகன் ரெட்டி படம் ஓடிக் கொண்டிருந்த தியேட்டரில் பவன் கல்யாண் ரசிகர்கள் சண்டை போட்டுள்ள நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் இதுபோன்ற அசம்பாவிதங்களை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தரப்பில் இருந்து கூறியுள்ளனர். அடுத்து பவன் கல்யாண் நடித்துள்ள ஓஜி படம் வெளியாகும் போதும் இதே போன்ற பிரச்சனைகளை இந்த தரப்பு கிளப்புமா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X