யுவனிடம் சம்பளம் வாங்கப்போகும் இளையராஜா

சென்னை: யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் அடுத்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

ை: யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் அடுத்த படத்திற்கு இசையானி இளையராஜா இசையமைக்கிறார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தயாரிப்பாளர்களில் முக்கியமானவராக மாறியிருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. பியார் பிரேமா காதல் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

YSR film next production with Vijay Sethupathi!

கொலையுதிர்காலம் ரிலீஸுக்கு தயாராகிவரும் நிலையில், இயக்குனர் இளனுடன் மீண்டும் ஒரு படத்தை யுவன் தயாரிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தையும் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குனர் சீனுராமசாமியும் நான்காவது முறையாக இணையும் படம் இதுவாகும். தென்மேற்கு பருவக்காற்று, தர்ம துரை மற்றும் இடம் பொருள் ஏவல் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைகின்றனர். என்ன கதை, விஜய் சேதுபதிக்கு ஜோடி யார்? மற்ற நடிகர்கள் போன்ற விவரங்கள் இன்னும் வெளியிடவில்லை. டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

இதில் மற்றுமொரு அழகான விஷயம் என்னவென்றால், இளையராஜா இசையமைக்கிறார் என்பது தான். அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ஏழாம் பொருத்தம். அவர் கிளாசிகல் இவர் வெஸ்டெர்ன் என்றாலும், இருவரும் இணைந்த புள்ளிகள் கொண்டாடப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இளையராஜா பாடிய பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. ஆனால் இப்போதுதான் யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் முதல்முறையாக இளையராஜா இசையமைக்க உள்ளார்.

அப்பாவின் கையில் குழந்தையாய் தவழ்ந்து, மாணவனாய் பல விஷயங்களைக் கற்று அவருடன் போட்டி போட்டு யுவன் வெற்றிபெற்றபோது கிடைக்காத ஆனந்தம் இளையராஜாவுக்கு இப்படத்தில் கிடைக்கப் போகிறது. ஆம், இளையராஜா யுவனின் கையால் சம்பளம் வாங்கப் போகிறார். தான் சாதித்த துறையில் சாதித்து தந்தையை பணியாற்ற வைத்து மரியாதையளிக்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்? அதுவும் யுவனுக்கு கிடைக்கப்போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X