மாமனிதன் படத்தின் அப்டேட் கொடுத்த யுவன் சங்கர் ராஜா!
சென்னை: விஜய் சேதுபதி, காயத்ரி சங்கர் ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாமனிதன்.
Recommended Video
சீனு ராமசாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர்.
இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே தயாரித்துள்ளார். மாமனிதன் படத்தின் முக்கிய அப்டேட்டை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

2 ஆண்டு காலம்
விஜய் சேதுபதியின் நடிப்பில் சம்மரில் நான்கு திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. துக்ளக் தர்பார், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர் & மாமனிதன். மாமனிதன்
படப்பிடிப்பு முடிந்து 2 ஆண்டுகள் ஆனாலும் சில பிரச்சினைகள் காரணமாக படம் ரிலீசாகாமல் இருந்தது.

உறுதியான தேதி
இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்தது. ஏற்கனவே சம்மரில் விஜய் சேதுபதியின் நடிப்பில் 3 படங்கள் வெளிவர காத்துள்ளதால் ஒருவழியாக மே 28ம் தேதி படத்தை வெளியிட போவதாக படக்குழு உறுதியளித்தது.

பெரிய எதிர்பார்ப்பு
சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக மாமனிதன் படத்தின் மூலம் இணைந்துள்ளது.
இவர்களின் கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த தென்மேற்குப் பருவக்காற்று , தர்மதுரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மாமனிதன் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

இசை விருந்து
இந்த படத்தின் அப்டேட்டை யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது இந்த படத்தின் முதல் பாடலை நாளை வெளியிடவுள்ளதாகவும், தன்னிடம் இருந்தும், தன் அப்பாவிடம் இருந்தும்
ரசிகர்களுக்கு இசை விருந்தாக இந்த பாடல் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











