தனுஷ் வில்லியின் மகனுக்கு இப்படி ஒரு திறமையா?: வாவ், வவ்வாவ்
மும்பை: நடிகை கஜோல், நடிகர் அஜய் தேவ்கனின் மகன் செய்யும் சாகசத்தை பார்த்து அசராதவர்களே இல்லை.
பாலிவுட் நடிகை கஜோல், நடிகர் அஜய் தேவ்கனுக்கு நியாசா என்ற மகளும், யுக் என்ற மகனும் உள்ளனர். 6 வயதான யுக் தந்தையை போன்று ஜிம்முக்கு செல்கிறார்.

இந்த வயதிலேயே ஜிம்முக்கு செல்லும் யுக் செய்யும் சாகசங்களை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அஜய் தேவ்கன். அந்த வீடியோவை பார்த்து வியக்காதவர்களே இல்லை.
யுக் தேவ்கனை போன்றே குட்டீஸ்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ எடுத்து வெளியிடுமாறு அஜய் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். மேலும் யுக் செய்வது போன்ற சாகசங்களை ட்ரெய்னர் இல்லாமல் செய்யக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிடுமாறு பிரபலங்கள் சவால் விடுத்து வரும் நிலையில் அஜய் தனது மகனின் வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











