கொஞ்சம் கேப்... 'கசட தபற' வில் மீண்டும் காமெடி யூகி சேது

By

சென்னை: சிம்புதேவன் இயக்கும் கசடதபற படத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு யூகி சேது நடித்துள்ளார்.

பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் படம், கசடதபற. சிம்புதேவன் இயக்கி வருகிறார்.

yugi sethu has joined Chimbu Devens Kasada Tabara

ஹரிஷ் கல்யாண், சாந்தனு, சந்தீப் கிஷன், வெங்கட்பிரபு, ரெஜினா, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 6 கேரக்டர்களை மையமாக வைத்து 6 பகுதிகளாக உருவாகிறது.

இதில் 6 ஒளிப்பதிவாளர்கள், 6 எடிட்டர்கள் பணியாற்றுகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ், பிரேம்ஜி, ஷான் ரோல்டன் ஆகிய 6 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கின்றனர்.

இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு யூகி சேது நடிக்கிறார்ர். இவர், ஏற்கனவே பஞ்சதந்திரம், அன்பே சிவம், ரமணா, அசல், ஹரிதாஸ், தூங்காவனம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கவிதை பாட நேரமில்லை மற்றும் மாதங்கள் ஏழு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்த யூகிசேது, கசடதபற படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்கிறார். இதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர்.

போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. அடுத்த மாதம் படம் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X