ஏ.ஆர். ரஹ்மான் பாடலை பாடிய யுவன், அனி, ஜி.வி., இமான்.. ஜீ தமிழ் விருது விழாவில் இது தான் ஹைலைட்டே!

சென்னை: ஜீ சினி விருது விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஜி.வி. பிரகாஷ், இமான், கெளதம் மேனன் உள்ளிட்டோர் மேடையில் பாடி அசத்தினர்.

நேற்று இரவு நடைபெற்ற ஜீ தமிழ் விருது விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிரைட் ஆஃப் இந்தியன் மியூசிக் அவார்டு வழங்கப்பட்டது.

ஜீ சினி விருது விழாவின் ஹைலைட் நிகழ்வுகளில் ரசிகர்களை அதிகம் ஈர்த்த விஷயமும் இதுதான்.

சிறந்த இசையமைப்பாளர்

விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி. இமானுக்கு கடந்த ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதினை ஏ.ஆர். ரஹ்மான் வழங்கினார். விஸ்வாசம் படத்திற்காக இந்த விருது வழங்கப்பட்ட நிலையில், தல ரசிகர்கள் நேரு ஸ்டேடியத்தையே அதிர விடும் அளவுக்கு ஆராவாரம் செய்தனர்.

பாட்டு கச்சேரி

விருது விழாவின் முக்கிய நிகழ்வாக தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களான அனிருத், யுவன் சங்கர் ராஜா, இமான், ஜி.வி. பிரகாஷ் மற்றும் இயக்குநர் கெளதம் மேனன் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களை மேடையில் பாடி அசத்தினர். நடிகை வாணி போஜன் இவர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு ரகளை செய்தார்.

ஒசோனா

ஒசோனா

இயக்குநர் கெளதம் மேனன் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அவரது இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்ற ஓசோனா பாடலை பாடினார். சிரித்துக் கொண்டே இசைப்புயல் ரஹ்மான் கைதட்டி அந்த பாடலை ரசித்தார்.

முஸ்தபா

முஸ்தபா

கெளதம் மேனனை தொடர்ந்து இசையமைப்பாளர் இமான் முஸ்தபா முஸ்தபா பாடலை பாடினார். அரங்கத்தில் இருந்த அத்தனை ரசிகர்களும், தங்களின் செல்ஃபோன் டார்ச்சுகளை ஆன் செய்து கையசைத்து அரங்கத்தையே அதிர செய்தனர்.

ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் தனது குரு ரஹ்மானின் அலைபாயுதே படத்தில் வரும் காதல் சடுகுடு பாடலை பாடி அசத்தினார்.

அனிருத்

அனிருத்

அதன் பிறகு மேடையேறிய ராக்ஸ்டார் அனிருத் ஊர்வசி ஊர்வசி பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், ஐ படத்தில் ரஹ்மான் இசையில் அவர் பாடிய மெர்சல் ஆயிட்டேன் பாடலையும் பாடி அசத்தினார்.

யுவன்

யுவன்

யுவன் சங்கர் ராஜா மேடை ஏறியதில் இருந்தே ரசிகர்களின் ஆராவரம் அதிகமானது. அப்பா பீக்ல இருக்கும்போது ரோஜா படம் வந்தது அப்புறம் இண்டஸ்ட்ரியே மாறிடுச்சு என புகழ்ந்தார். மரியான் படத்தில் வரும் கொம்பன் சூறா வேட்டையாடும் பாடலை யுவன் பாட அரங்கம் மீண்டும் அதிர்ந்தது.

ரஹ்மானுக்கு விருது

கெளதம் மேனன், இமான், யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஜி.வி. பிரகாஷ் இணைந்து இந்திய இசையின் பெருமை விருதை ஏ.ஆர். ரஹ்மானுக்கு வழங்கினர். அனைவருக்கும் தனது நன்றியை ரஹ்மான் தனது ஸ்டைலில் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X