யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள்
முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 35-வது பிறந்த நாளை உறவினர்களுடன் நேற்று கொண்டாடினார்.
அவரது தந்தை இளையராஜா நேரில் வந்து வாழ்த்து கூறினார்.
அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் சங்கர் ராஜா.
கடந்த 20 ஆண்டுகளில் 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். சில படங்களில் தோன்றி ஆடியும் உள்ளார்.

இஸ்லாம்
சில மாதங்களுக்கு முன் தான் இஸ்லாமிய மதத்தைத் தழுவியதாக அறிவித்தார். ஒரு இஸ்லாமியராக முதல் ரம்ஜானை கடந்த மாதம் கொண்டாடினார்.

பிறந்த நாள்
நேற்று அவரது 35வது பிறந்த நாளை தன் வீட்டில் கொண்டாடினார் யுவன். அவரதுஉறவினர்களும் நண்பர்களும் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.

இளையராஜா
யுவனின் தந்தை இளையராஜாவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மகனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது யுவன் கேக் வெட்டி தன் தந்தை உள்ளிட்டோருக்கு ஊட்டினார்.
வெங்கட் பிரபு
இந்த நிகழ்ச்சியில் யுவனின் அண்ணன்கள் கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், சகோதரிகள் பவதாரிணி, வாசுகி, பாவலர் சிவா, நடிகர் கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டு யுவனை வாழ்த்தினர்.

முத்தமிட்ட
கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், சகோதரிகள் பவதாரிணி, வாசுகி, கிருஷ்ணா ஆகியோரில் ஒவ்வொருவரும் யுவனை கட்டிப் பிடித்த முத்துமிட்டு வாழ்த்தினர்.

விஷால் - வரலட்சுமி
யுவனுக்கு நடிகர் விஷால், நடிகை வரலட்சுமி ஆகியேரும் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











