பாரதிராஜாவின் அடுத்த படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா!
பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து மீண்டும் இணைவார்களா என, எண்பதுகளில் வெளியான அவர்களின் படங்கள் பார்த்து கிறங்கிய ரசிகர்கள் இன்னும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
ஆனால் அது இப்போதைக்கு நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால் வேறு ஒரு வழியில் ரசிகர்களின் அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது.

இளையராஜாவுக்கு பதில் அவரின் இளையமகன் யுவன் சங்கர் ராஜா இவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
ஏற்கெனவே இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
அடுத்து பாரதிராஜாவின் புதிய படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் யுவன்.
இதனை பாரதிராஜாவே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "லண்டனில் குடியேறிய ஒரு குடும்பத்தின் வாழ்க்கையைப் பற்றிய படத்தை விரைவில் இயக்கவுள்ளேன். வயதான ஒருவனுக்கும், ஒரு சிறு குழந்தைக்கும் இடையேயான பிணைப்பைச் சொல்லும் படம் இது. இதன் படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப்படத்தை இயக்குவதுடன் நான் நடிக்கவும் செய்கிறேன். அந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்," என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











