தர்மதுரைக்கு ஒரே நாளில் பாட்டு... சீனு ராமசாமியை நெகிழ வைத்த யுவன்!
எடுத்த இடம் பொருள் ஏவல் இன்னும் வெளியாகவில்லையே என்ற கவலை இருந்தாலும், நம்பிக்கையுடன் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் இயக்குநர் சீனு ராமசாமி.
இப்போது அவர் உருவாக்கும் புதிய படம் தர்மதுரை. இடம் பொருள் ஏவலுக்கு இசையமைத்த அதே யுவன் சங்கர் ராஜா- பாடல் எழுதிய வைரமுத்து கூட்டணி இதிலும் தொடர்கிறது.
இந்தப் படத்துக்கு ஒரே நாளில் மொத்தப் பாடல்களுக்கும் ட்யூன் போட்டுக் கொடுத்து அசத்தியிருக்கிறார் யுவன்.

அதுகுறித்து பேஸ்புக்கில் சீனு ராமசாமி இப்படி எழுதியிருக்கிறார்.
"அவரிடம் பாடல் வருவதற்கு கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்வார் ஆனால் நீங்கள் விரைந்து படத்தை எடுத்து முடிக்க திட்டமிடுகிறீர்கள்.... என்றெல்லாம் அறிவுரைகள் தரப்பட்டது. தர்மதுரை படத்தின் கதையை சொல்லிவிட்டு வந்த ஒரே வாரத்தில் நேற்று தனது வள்ளூவர் கோட்ட அலுவலகத்திலிருந்த்து நணபர் இசைஞர் யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
ஒரே வீச்சில் திரைக்கதையின் தேவையை பூர்த்தி செய்யும் அனைத்து பாடல்களையும் நிறைவு செய்தார் யுவன், கம்போசிங் செய்த டியூன்கள் கேட்டு விட்டு நெகிழ்ச்சிப் பூக்களை தூவினார் பாட்டுத்திலகம் கவிஞர் வைரமுத்து.
"மாம்ஸ் ரொம்ப இம்பாக்டா இருக்கு மாம்ஸ்..." என்று சந்தோஷித்தார் அருமை தயாரிப்பாளர், தாரைத்தபட்டை திரைப்பட அறிமுக நடிகர், ஸடுடியோ நைன் சுரேஷ், ட்யூன்களைத் திரும்பத் திரும்பக் கேட்டபடி மிதந்திருந்தேன்.
வள்ளுவர் கோட்டத் தேர் நகரத் தொடங்கியது. உயிர்பெற்ற குதிரைகளின் கணைப்பொலி ஆழ் மனதில் கேட்கத் தொடங்கியது. நண்பர் யுவன் அத்தேரில் அமர்ந்திருந்தார்!"


Click it and Unblock the Notifications