இவங்க வேற... அதுக்குள்ள அப்படி கிளப்பிட்டாய்ங்க... அஜித்தின் வலிமைக்கு இவர்தான் மியூசிக் டைரக்டர்

By

சென்னை: அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்துக்கு தானே இசை அமைப்பதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம், நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் இது.

Recommended Video

வலிமையில் அருண் விஜய்யும் இருக்கிறாராம் மாமே!

இந்தியில் அமிதாப்பச்சன் நடித்திருந்த வேடத்தில் அஜித் நடித்திருந்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதைத் தொடர்ந்து வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடிக்கிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

காவல்துறை அதிகாரி

காவல்துறை அதிகாரி

இந்தப் படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது.

சென்டிமென்ட்

சென்டிமென்ட்

கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களுமே ஹிட். இதன் ஷூட்டிங் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்தான் நடந்தது. அந்த சென்டிமென்ட் காரணமாக, இதன் ஷூட்டிங்கும் அங்கு நடப்பதாகக் கூறப்பட்டது.

யாமி கவுதம்

யாமி கவுதம்

அஜித் ஜோடியாக, யாமி கவுதம் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதுவரை ஹீரோயின் இல்லாத காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா

இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளராக, யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவரை நீக்கிவிட்டு டி.இமான் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும் அவர் வலிமை படத்துக்கு இசை அமைக்கிறார் என்றும் செய்திகள் வெளியாயின.

மறுப்பு

மறுப்பு

இந்நிலையில் இதை மறுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. தானே இந்தப் படத்துக்கு இசை அமைப்பதாகவும் பாடல் கம்போசிங் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X