பியார் பிரேமா காதல் வெற்றி…! இயக்குனருக்கு பரிசாக கிடைத்த சொகுசு கார்!
யுவன் இயக்குனர் எலனுக்கு காரை பரிசளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இயக்குனர் எலனுக்கு ஒரு காரை பரிசளித்துள்ளார்.
இசையமைப்பாளர், பாடகர் என்று இசைத் தொடர்பாகவே இயங்கிக்கொண்டிருந்த யுவன் ஷங்கர் ராஜா, ஒய்.எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் என தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்.

படத்தின் டீசர், ட்ரெயிலரைத் தாண்டி, யுவனை கண்டிப்பது போல மிர்ச்சி சிவா வீடியோ வெளிட்டது, கிருஷ்ணா வீடியோ என புரமோஷன் வேலைகளில் புதிய யுக்திகளைக் கையாண்டனர்.
பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி படம் ரிலீஸ் ஆனது. விஸ்வரூபம் 2 திரைப்படத்துடன் ரிலீஸ் ஆகிறது என்ற பேச்சே படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
படக்குழுவினர் எதிர்பார்த்தது போலவே எல்லோருக்கும் பிடித்த கலகலப்பான பொழுதுபோக்கு படமாக பியார் பிரேமா காதல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதனால், தன்னுடைய முதல் படத்தை வெற்றிபெற வைத்த இயக்குனர் எலனுக்கு ஒரு சொகுசு காரை பரிசளித்து கௌரவித்திருக்கிறார் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.


Click it and Unblock the Notifications











