Don't Miss!
- News
அதிமுக ஐடி விங்கின் அடுத்த அசைன்மெண்ட்! டார்கெட் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்! ஜரூராக நடக்கும் வேலை!
- Technology
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.! OnePlus Q2 Pro வருது.! அவசரப்பட்டு வேற டிவி வாங்காதீங்க.! ஏன்னா?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Finance
அமெரிக்கா செல்ல திட்டமிடுவோருக்கு நல்ல விஷயம்.. விசா நடைமுறையில் தளர்வுகளா?
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Lifestyle
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய லவ் டுடே... பாட்டும் சூப்பர் ஹிட்: யுவன் சம்பளம் இதுதானா... அட பாவமே!
சென்னை: பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இயக்கியதுடன் பிரதீப் ரங்கநாதனே ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
லவ் டுடே திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்தப் படத்திற்காக யுவன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரும் பெண்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணியிருக்கார்..கே.ராஜனை விளாசிய பயில்வான் ரங்கநாதன்!

சூப்பர் ஹிட் அடித்த லவ் டுடே
கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்து லவ் டுடே படத்தை இயக்கியிருந்தார். நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் அவரே ஹீரோவாகவும் அறிமுகமானார். பிரதீப் ஜோடியாக இவானா நடிக்க, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர். யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற லவ் டுடே, பாக்ஸ் ஆபிஸிலும் சுமார் 90 கோடிகள் வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

சொல்லுங்கு மாமா குட்டி
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மாஸ் ஹிட் கொடுத்த லவ் டுடே படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 2கே கிட்ஸ்களை டார்க்கெட் செய்து யுவன் போட்ட ஒவ்வொரு மெட்டும் பாடல் வடிவில் சூப்பர் ஹிட் ஆனது. 'சொல்லுங்க மாமா குட்டி', ' என்னை விட்டு போகாதே', 'பச்சை இலை' என அனைத்து பாடல்களுமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதேபோல், யுவனின் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருந்தது. லவ் டுடே படத்தின் வெற்றியில் யுவனின் இசைக்கும் முக்கியமான பங்கு உள்ளதை யாரும் மறுக்கவே முடியாது.

யுவனின் சம்பளம் - ரசிகர்கள் அதிர்ச்சி
இந்நிலையில், லவ டுடே படத்திற்காக யுவன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. லவ் டுடே திரைப்படம் மொத்தமே 10 முதல் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனல் யுவன் சங்கர் ராஜாவுக்கும் குறைவாகவே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதன்படி 1.20 கோடி ரூபாய் மட்டுமே யுவன் சம்பளமாக வாங்கியுள்ளாராம். சில வருடங்களாக சரியான ஹிட் பாடல்கள் கொடுக்க முடியாமல் இருந்தார் யுவன். அதனால் தான் அவருக்கு குறைவான சம்பளமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

யுவனின் பெருந்தன்மை
அதேபோல், லட் டுடே படத்திற்காக யுவன் குறைவான சம்பளம் வாங்கியது அவரது பெருந்தன்மையை காட்டுவதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்ப ரொம்பவே குறைவாக சம்பளம் வாங்கியுள்ளதாக தெரிகிறது. அதிகபட்சமாக ஏஆர் ரஹ்மான் ஒரு படத்திற்கு 7 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். அவருக்கு அடுத்தபடியாக அனிருத் ஒரு படத்திற்கு 3 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால், 25 ஆண்டுகளாக கோலிவுட்டை கலக்கி வரும் யுவன் 1.20 கோடி ரூபாய் மட்டுமே வாங்கியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடரும் வசூல் வேட்டை
லவ் டுடே திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரம், ஓடிடியில் வெளியான பின்னரும் கூட லவ் டுடே படம் திரையரங்குகளில் ஓடி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்தப் படத்தின் கலெக்ஷன் மேலும் அதிகரிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.