ரசிகர்களுடன் உரையாட காத்திருக்கும் யுவன்: பிறந்தநாளில் அசத்தலாக வீடியோ வெளியிட்டு சர்ப்ரைஸ்

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Recommended Video

ரசிகர்களுடன் உரையாட காத்திருக்கும் யுவன்: பிறந்தநாளில் அசத்தலாக வீடியோ வெளியிட்டு சர்ப்ரைஸ்

யுவனின் பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் யுவன் சங்கர் ராஜா வீடியோ வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

43வது பிறந்தநாள்

43வது பிறந்தநாள்

‘அரவிந்தன்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், சினிமா பயணத்தில் தனது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என இசை ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக யுவன் சங்கர் ராஜா காணப்படுகிறார். இன்று அவர் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து திரை நட்சத்திரங்கள் யுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் #HBDYuvanShankarRaja என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நன்றி சொன்ன யுவன்

நன்றி சொன்ன யுவன்

சும்மாவே ரசிகர்கள் யுவனை பயங்கரமாக கொண்டாடுவார்கள். இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாள் என்பதால், யுவனின் பாடல்களை ஒலிக்கவிட்டு சியர்ஸ் செய்து வருகின்றனர். ரசிகர்களிடம் இருந்து இப்படியொரு வெறித்தனமான அன்பை எதிர்பார்க்காத யுவன், அவர்களுக்கு சிறப்பான முறையில் நன்றி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள யுவன், "எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் கேள்விக்கு பதில்

ரசிகர்களின் கேள்விக்கு பதில்

யுவன் வெளியிட்ட வீடியோவில் ரசிகர்களுக்கு நன்றி சொன்னதோடு, இன்னொரு சர்ப்ரைஸ்ஸையும் கொடுத்துள்ளார். அதாவது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களுடன் டிவிட்டரில் உரையாட ரெடியாக இருப்பதாகவும் பேசியுள்ளார். ரசிகர்கள் உங்களுடைய கேள்விகளை #AskU1 என்ற ஹேஷ்டேக்கில் கேட்குமாறும் அவர் கூறியுள்ளார். இதனால் உற்சாகமான யுவனின் ரசிகர்கள், தற்போது #AskU1 என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். மேலும், தங்களது கேள்விகளையும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

சென்னையில் இசை விருந்து

சென்னையில் இசை விருந்து

யுவன் சங்கர் ராஜா பதிலளிக்கவிருப்பது அவரது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் விஜய்யுடன் எப்போது இணைவீர்கள் என்றே கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில், தனது ரசிகர்களுக்கு இசை விருந்து கொடுக்க உள்ளதாக யுவன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு 'யு & ஐ' என பெயரிடப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியை காண ரசிகர்களும், பிரபலங்களும் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X