ரசிகர்கள் கெஞ்சிக் கூத்தாடியும் கண்டுக்காத தனுஷ்?
சென்னை: தனுஷின் மாரி 2 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்த மாரி 2 படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இரண்டாம் பாகத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணா
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷுடன் சேர்ந்து மாரி 2 படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கிருஷ்ணா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அனிருத்
மாரி படத்தை போன்றே மாரி 2 படத்திற்கும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க வேண்டும், தனுஷ்-அனி கூட்டணியை மீண்டும் பார்க்க விரும்புகிறோம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

டிஎன்ஏ கூட்டணி
மாரி 2 படத்திற்கு அனிருத் அல்ல மாறாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் டிஎன்ஏ(தனுஷ்-அனிருத் கூட்டணி) ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஆர்வம் இல்லை
எங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்று தனுஷும், அனிருத்தும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து பணியாற்ற ஆர்வம் காட்டவில்லை.


Click it and Unblock the Notifications











