வாவ்... வவ்வாவ் நியூஸ்... யுவன் இசைக்கு ஆடப் போகும் சூப்பர் ஸ்டார்!
Recommended Video
சென்னை: இசைஞானி இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இரண்டு மாஸ் ஹீரோக்களுக்காகவும் எத்தனையோ நூறு ஆவ்ஸம் பாடல்களை கொடுத்திருக்கிறார். உலகம் அழியும் வரையில் உயிர்த்துடிப்போடு இருக்கும், இருக்கப்போகும், இருந்தே தீரும் கீதங்கள் அவை. இதில் மாற்றுக் கருத்தே இல்லை.
இளையராஜாவின் மூன்று குழந்தைகளுமே இசையில் அரசர்கள்தான். கார்த்திக் ராஜாவின் மெலடியும், பவதாரிணியின் இனிய குரல் வளமும், யுவனின் ஃபாஸ்ட் பீட்ஸ் மற்றும் மெலடிகளும் இந்தியர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவை.

யுவன் ஷங்கர் ராஜா என்னதான் தெறி பாடல்களை போட்டாலுமே கூட இன்னமும் ரஜினி, கமல் படங்களுக்கு அவர் இசைத்தது இல்லை எனும் குறை இருந்தது. இப்போது வந்த அனிருத் கூட ரஜினிக்கு இசைத்துவிட்டார், கமலுக்கு இசைக்க இருக்கிறார். ஆனால் யுவன் ஏன்? என்ற கேள்வி இருந்தது.
இந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. ஆம், யுவனின் இசையில் சூப்பர் ஸ்டார் ஆட இருக்கிறார். தர்பார் படத்துக்கு அடுத்தோ, அல்லது அதற்கு அடுத்த படத்துக்கு அடுத்தோ சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் தான் என்கிறார்கள்.
இந்த தகவலில் யுவன் செம்ம ஹேப்பி. ஆனால் அதை விடவும் ரஜினி பெரிய ஹேப்பியாம். காரணம் இளையராஜாவை ரஜினிக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்கும். ஆனால் அவர் பாடலில் நடித்து பல வருடங்களாகிவிட்டது. ரஜினிக்கு ஆசை இருந்தாலும் சில இயக்குநர்கள் சம்மதிப்பதில்லை.
இந்த நிலையில் இளையராஜாவின் மகனும், அவரது இசை சாயல் உடைய யுவனின் இசையில் ஆடப்போவது அவருக்கு மகிழ்ச்சியே. யுவனின் கீதங்கள் பலவற்றைக் கேட்டு ஏற்கனவே பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார். இந்த நிலையில் அவரே யுவனின் பாடலுக்கு வாயசைக்கவும், ஆடவும் இருக்கிறார் எனும் தகவல்கள் டபுள் தமாக்கா சந்தோஷத்தை தந்துள்ளன.
மகிழ்ச்சி!
¬ ஜி.தாமிரா


Click it and Unblock the Notifications











