Yuvan NetWorth: 16 வயதில் அறிமுகம்... ரசிகர்களின் இசை போதை... யுவனின் நெட்வொர்த் வேல்யூ தெரியுமா?
சென்னை: கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா.
தனது 16 வயதில் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தற்போது விஜய்யின் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ள யுவன், இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில், யுவனின் சம்பளம், சொத்து மதிப்பு போன்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.
யுவனின் நெட்வொர்த் வேல்யூ 2023: 1997ம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன், தனது தந்தையையும் ஏஆர் ரஹ்மானையும் கலந்துசெய்த புதுமையாக இசையுலகில் பயணிக்கத் தொடங்கினார். செல்வராகவன் - யுவன் - நா முத்துக்குமார் கூட்டணி ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் எனலாம்.
சில வருடங்களாக சரியான ஹிட் கொடுக்காமல் இருந்த யுவன், நானே வருவேன், லவ் டுடே, பரம்பொருள் என மீண்டும் ஹிட் லிஸ்ட்டில் இணைந்துவிட்டார். முக்கியமாக விஜய்யின் தளபதி 68 படத்தில் யுவன் கமிட்டாகியுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கவுள்ள தளபதி 68, விஜய் - யுவன் காம்போ இணையும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் தளபதி 68 படக்குழு சார்பில், யுவனுக்கு ஸ்பெஷலாக வாழ்த்து சொல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையுலகில் 25 ஆண்டுகளை கடந்துவிட்ட யுவன், இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஆரம்ப காலங்களில் லட்சங்களில் வாங்கிய யுவன், கடந்த சில வருடங்களாகவே கோடிகளில் சம்பளம் பெறுகிறாராம். அதுவும் கூட படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப சில நேரங்களில் தனது சம்பளத்தை குறைத்துக்கொள்வார் என சொல்லப்படுகிறது. கடந்தாண்டு சூப்பர் ஹிட்டான லவ் டுடே படத்துக்காக, 2 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கினாராம் யுவன். பொதுவாக ஒரு படத்துக்கு 2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
அதன்படி, மாதம் ஒன்று முதல் இரண்டு கோடி வரையும், ஆண்டுக்கு 15 கோடி அளவிலும் வருமானம் கிடைக்கிறதாம். இதனடிப்படையில் யுவனின் நெட்வொர்த் ஒட்டுமொத்தமாக 50 முதல் 70 கோடி வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் யுவனுக்கு சொந்தமாக இரண்டு ஃப்ளாட்கள் இருப்பதாகவும், அவைகளின் மதிப்பு 6 கோடி இருக்கும் எனவும் தெரிகிறது.
கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட யுவன், 60 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான ஆஸ்டர் மார்ட்டின், BMW ஆகிய கார்களை சொந்தமாக பயன்படுத்துகிறாராம். வீடு, கார்கள் போக தனியாக ரெக்கார்டிங் ஸ்டுடியோ, தயாரிப்பு நிறுவனம் ஆகியவையும் யுவனது சொத்து மதிப்பில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











